கிளைமேக்ஸ் மட்டும் இவ்வளவு கோடியா செலவா?!.. விஜய்க்கு துப்பாக்கி மாதிரி எஸ்.கே.வுக்கு மதராஸி!..
Madharasi: கோலிவுட்டில் முக்கிய நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். மிகவும் குறுகிய காலகட்டத்திலேயே வேகமாக வளர்ந்த நடிகர் இவர். இவரின் சீனியர்களையெல்லாம் ஓவர்டேக் செய்து ஹிட் படங்களை கொடுத்து அவர்களை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறினார். அதாவது தனுஷ், சிம்பு, சூர்யா, கார்த்தி, விக்ரம், விஜய் சேதுபதி உள்ளிட்ட எல்லா நடிகர்களையும் விட அதிக சம்பளம் வாங்கினார். இவரை சுருக்கமாக எஸ்.கே என சினிமா வட்டாரத்தில் அழைக்கிறார்கள்.
துவக்கத்தில் காதல் கலந்த காமெடி படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் இப்போது சீரியஸான கதைகளில் நடிக்க துவங்கிவிட்டார். விஜய் சினிமாவிலிருந்து விலகி அரசியலுக்கு போவதாக அறிவித்த சூழ்நிலையில் கோட் படத்தில் விஜய் தனது துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் கொடுத்துவிட்டு செல்லும் காட்சியும் அவருக்கு அமைந்தது.
இதைத்தொடர்ந்து அடுத்த விஜய் சிவகார்த்திகேயன்தான் என பலரும் பேசினார்கள். இதை புரிந்துகொண்ட எஸ்.கே காமெடியை விட்டுவிட்டு சீரியஸான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கினார். சுதாகொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இது 1960களில் தமிழ்நாட்டில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றிய கதை.
ஒருபக்கம், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடிக்க துவங்கினார். இந்த படமும் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. இந்த படத்தில் தாடியோடு ரக் லுக்கில் ஒரு கெட்டப், முறுக்கு மீசையோடு ஒரு கெட்டப் என இரண்டு தோற்றத்தில் நடித்து வருகிறார். பக்கா ஆக்சன் படமாக மதராஸி உருவாகி வருகிறது.
இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை மட்டும் துறைமுக பகுதியில் 3 கோடி செலவு செய்து எடுத்திருகிறார்களாம். துப்பாகி படத்தில் வில்லனாக நடித்த வித்யூத் ஜம்வால் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். விஜய்க்கு துப்பாக்கி எப்படி கை கொடுத்ததோ அப்படி சிவகார்த்திகேயனுக்கு மதராஸி அமையும் என்கிறார்கள்.