மானப் பிரச்சினையில் சிக்கி தவித்த பாலச்சந்தர்.. காப்பாற்றிய மணிரத்னம்
தமிழ் சினிமாவில் தனது படைப்புகளால் தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் கே பாலச்சந்தர் மற்றும் மணிரத்தினம். 80கள் காலகட்டத்தில் பாலச்சந்தர் ஒரு சிகரமாக இருந்தார். ரஜினி, கமல் என இன்று முன்னணி நடிகர்களாக இருக்கும் சில நடிகர்களை அறிமுகப்படுத்தியவர் பாலச்சந்தர்தான். இவரால் அறிமுகம் செய்யப்பட்டவர்கள் இன்று பெரிய ஆளுமைகளாக இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஒரு சமயம் மணிரத்தினத்தை பாலச்சந்தர் அவாய்ட் செய்த சம்பவத்தை பற்றி ஒரு பேட்டியில் கவிதாலயா நட்ராஜன் கூறினார். அதாவது கவிதாலயாவுக்கு ஒரு படம் பண்ண வேண்டும். அதை மணிரத்தினம் பண்ணினால் நன்றாக இருக்கும் என நட்ராஜன் நினைத்திருக்கிறார். இதை பாலச்சந்தரிடமும் போய் சொல்லியிருக்கிறார். ஆனால் பாலச்சந்தர் ‘மணிரத்தினமா? வேண்டாம்’ என கூறினாராம்.
ஏன் என கேட்டதற்கு ‘இல்ல அவன் பண்ண மாட்டான்’ என பாலச்சந்தர் சொன்னாராம். அதற்கு என்ன காரணம் என நட்ராஜன் கேட்க ‘முன்பு என்னை சந்திக்க பல முறை மணிரத்தினம் வந்திருக்கிறார். ஆனால் அவரை நான் சந்திக்காமல் தட்டிக் கழித்திருக்கிறேன். காலையில் வந்தவர் மாலை ஆனாலும் எனக்காக காத்திருப்பார். ஆனால் ஒரு முறை கூட நான் மணிரத்தினத்தை சந்திக்க அனுமதிக்கவில்லை’ என்று பாலச்சந்தர் கூறினாராம்.
ஒருவேளை நீ போய் கேட்டு அதை மணிரத்தினம் முடியாது என சொல்லிவிட்டால் அது என்னுடைய மானப்பிரச்சினையாக போய்விடும் என்று கூறினாராம் பாலச்சந்தர். ஏனெனில் இதே போல் முன்பு ஒரு இயக்குனரும் இதே மாதிரிதான் ‘பாலச்சந்தர் என்னிடம் வந்து படம் பண்ண கேட்டார். நான் முடியாது என சொல்லிவிட்டேன்’ என மத்தளம் அடித்துவிட்டாராம். அதே மாதிரி இப்பொழுதும் நடந்துவிடுமோ என்று பாலச்சந்தர் பயந்திருக்கிறார்.
ஆனாலும் நட்ராஜன் ‘உங்களுக்கு என்ன வேண்டும். ஒரு வேளை அவர் ஒத்துக்கிட்டால் நல்லது. அப்படி இல்லையென்றால் பாலச்சந்தர் கேட்டு நான் முடியாது என சொல்லிவிட்டேன் என்று மணிரத்தினம் சொல்லக் கூடாது. அப்படித்தானே? அவர் சொல்லமாட்டார். நான் பார்த்துக் கொள்கிறேன்’ என சொல்லிவிட்டு மணிரத்தினத்தை பார்க்க போனாராம் நட்ராஜன்.
போனதுமே எங்களுடைய கவிதாலயாவுக்கு படம் பண்ண வேண்டும் என நட்ராஜன் கேட்க உடனே எந்த மறுப்பும் சொல்லாமல் மணிரத்தினம் சம்மதித்துவிட்டாராம். அன்று மாலையே பாலச்சந்தருடனும் சந்திப்பு நடந்திருக்கிறது. மணிரத்தினத்திடம் ‘ நான் வேண்டானுதான் சொன்னேன். நீ பண்ண மாட்டாய் என்று தான் சொன்னேன். ஆனால் நட்ராஜன் தான் கேட்காமல் உன்னிடம் வந்து கேட்டுவிட்டான்’ என சொல்லி மிகப்பெருந்தன்மையாக நடந்துகொண்டாராம் பாலச்சந்தர்.