பெயரை மாத்துனது ஒர்க் அவுட் ஆச்சா?.. ரவி மோகனின் 'காதலிக்க நேரமில்லை' ட்விட்டர் விமர்சனம்..

By :  Ramya
Update: 2025-01-14 09:54 GMT

Kadhalikka Neramillai: இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ரவி மோகன், நித்யா மேனன், டிஜே பானு, வினய், யோகி பாபு ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் காதலிக்க நேரமில்லை. இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கின்றது. இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்.

மேலும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருக்கின்றது. முழுக்க முழுக்க இந்த காலத்து காதல் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கின்றார் கிருத்திகா. இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் இருவருக்கும் சரி அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு படத்தின் கதையை இயக்கி இருக்கின்றார். இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் நிலையில் தொடர்ந்து ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள்.

படத்தின் கதை: இந்த படத்தின் கதாநாயகனாக இருக்கும் ரவி தனது நண்பர்களுடன் சேர்ந்து விந்து அணுவை சேமித்து வைக்க முடிவு செய்ய அப்போது தவறுதலாக ரவியின் விந்து அணு டோனர் லிஸ்டில் சேர்க்கப்பட்டது. கதாநாயகியாக இருக்கும் நித்யா மேனன் தனது காதலனால் ஏமாற்றப்பட குழந்தை பெற்றுக் கொள்வதற்கு கணவன் தேவை இல்லை என்று எண்ணி டோனர் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கிறார்.

அதன் பிறகு என்ன ஆகும் என்பது தான் இப்படத்தின் கதை. இதற்கு பிறகு ரவியும் நித்யாவும் எப்படி சேர்ந்தார்கள். என்ன நடந்தது என்பது தான் இப்படத்தின் கதையாக இருக்கின்றது.

டிவிட்டர் விமர்சனம்: நடிகர் ரவி மோகனுக்கு இது ஒரு மிகச் சிறந்த கம்பேக்காக இருக்கும். ஏ ஆர் ரகுமான் பாடல் மிகச்சிறப்பாக இருக்கின்றது. நித்யா மேனன் நடிப்பு திரையில் மிகச் சிறப்பாக இருக்கின்றது. ரவி மோகன் ஒவ்வொரு சீனும் மிகச் சிறந்த ஹைலைட். இது ஒரு இந்த காலத்து காதல் கதையாகும்.


அந்த காலத்தில் காதல் எப்படி இருக்கின்றது என்பதை மிகச் சிறந்த முறையில் காட்டி இருக்கின்றார் கிருத்திகா. ரவி மோகன் மற்றும் நித்யா மோகன் நடிப்பு அட்டகாசமாக இருக்கின்றது. ஆக்சன் ஹீரோ இமேஜ் விட்டுவிட்டு ஒரு மசாலா படத்தில் ரவியை பார்ப்பது வித்தியாசமாக இருந்தது. இது போன்ற இன்னும் பல வேடங்களில் அவரை பார்ப்பேன் என்று நம்புகிறேன்.



 


ஏ ஆர் ரகுமான் இசை ஓகே கண்மணியை நினைவூட்டுகின்றது. மேலும் இந்த திரைப்படத்தை வேறு ஒரு லெவலுக்கு உயர்த்தியது ஏ ஆர் ரகுமானின் பாடல் ஆகும். இரண்டாவது பாதியில் அவரது பின்னணி இசை வெளிநாட்டு படங்களைப் போல தனித்துவமாக இருக்கின்றது. நித்யா மேனனின் நடிப்பு மட்டும் டான்ஸ் அனைத்துமே மிகவும் சூப்பராக இருந்தது.


படத்தில் இருந்த அனைத்து நடிகர்களுக்கு தனது நடிப்பை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். படம் 5க்கு 3.5 என்கின்ற ரேட்டிங் இருக்கின்றது. ஒரு வழியாக ஜெயம் ரவிக்கு இந்த திரைப்படம் ரவி மோகனுக்கு ஹிட் படமாக அமைந்திருப்பது அவரின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

Tags:    

Similar News