மூளையை கழட்டி பிரிட்ஜில வச்சிருங்க!.. மதகஜராஜாவுக்கு புளு சட்டை கொடுத்த விமர்சனம்!..

By :  Ramya
Update: 2025-01-13 08:09 GMT

மதகஜராஜா படம்: இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் மதகஜராஜா. இந்த திரைப்படத்தை ஜெமினி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. படம் எடுக்கப்பட்டு கிட்டத்தட்ட 12 ஆண்டுகளான நிலையில் பல பிரச்சனைகள் காரணமாக படம் ரிலீஸ் ஆகாமல் இருந்து வந்தது.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார். இந்நிலையில் இப்படம் பொங்கலை முன்னிட்டு நேற்று வெளியாகி இருக்கின்றது. படம் வெளியானது முதலே ரசிகர்களிடையே ஏகப்போக வரவேற்பு இருக்கின்றது. படத்தை பார்த்தவர்கள் தொடர்ந்து பாஸிட்டிவான விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள்.


12 வருடம் கழித்து வெளியான திரைப்படம் என்றாலும் தற்போது பார்ப்பதற்கு அருமையாக இருக்கின்றது. அதிலும் விண்டேஜ் சந்தானத்தின் காமெடி பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் திரையரங்குக்கு படையெடுத்து வருகிறார்கள். தொடர்ந்து படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றது.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: தொடர்ந்து சினிமா விமர்சகர்கள் படத்திற்கு நல்ல விமர்சனங்களை கொடுத்து வரும் நிலையில் விமர்சனத்திற்கு பெயர் போன ப்ளூ சட்டை மாறன் இந்த திரைப்படத்திற்கு தன்னுடைய பாணியில் விமர்சனத்தை தெரிவித்து இருக்கின்றார். விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் 12 வருஷத்துக்கு முன்னாடி எடுத்த படம் இருந்தாலும் இப்போது பார்ப்பதற்கு ரொம்பவும் நல்லா இருக்கு.

சமீப நாட்களாக படம் என்ற பெயரில் குப்பை படங்களை எடுத்து வருகிறார்கள். 12 வருடம் கழித்து வந்த இந்த படமே நல்லா இருக்கு என்றால் எப்படின்னு பார்த்துக்கோங்க. சுந்தர் சி திரைப்படம் என்றாலே மூளையை கழட்டி ஃப்ரிட்ஜில் வைத்து விட்டு தான் பார்க்க வேண்டும். அப்படி தான் இந்த திரைப்படமும், லாஜிக் பார்த்தால் வேலைக்காகாது. சந்தானத்தின் காமெடி பல இடங்களில் சூப்பராக ஒர்க் அவுட்டாகி இருக்கின்றது.

விஷாலுக்கு படம் மிகச் சிறந்த படமாக அமைந்திருக்கின்றது. வரலட்சுமி மற்றும் அஞ்சலி இரண்டு ஹீரோயின்களையும் சூப்பராக இந்த படத்தில் பயன்படுத்தி இருக்கின்றார் கவர்ச்சியில் புகுந்து விளையாடி இருக்கிறார்கள். தற்போது வருகிற குப்பை படங்களுக்கு மத்தியில் இந்த திரைப்படம் மிகச்சிறந்த படமாக அமைந்திருக்கின்றது.


ஒரு படத்துல 60 சீன் இருக்கு என்றால் 60 சீனுமே நல்லா இருக்கணும்னு கேக்கல.. ஒரு 4 சீன் நல்லா இருந்தாபோதும் அந்த நறுக்குனு 4 சீன் இந்த படத்துல இருக்கு. அதனால இந்த படத்தை போய் கண்டிப்பா தியேட்டர்ல பாருங்க. கிளாமர் அதிகமா இருக்கு அப்படிங்கறதுனால இந்த படத்தை குடும்பத்துடன் குழந்தைகளோட போய் பார்க்க வேண்டுமா அப்படின்னு யோசிச்சீங்கன்னா? ஓடிடி-ல இதே படத்தை நடு வீட்ல உட்கார்ந்து பார்க்க தான் போறீங்க.

அதுக்கு பதிலா தியேட்டர்ல போய் பார்க்கலாம்' என்று படத்தை புகழ்ந்து பேசி இருக்கின்றார். இதை பார்த்து ரசிகர்கள் புளூ சட்டை மாறன் கொடுத்த பாசிட்டிவ் விமர்சனங்களை பார்த்து ஆச்சரியப்பட்டு போய் இருக்கிறார்கள்.

Tags:    

Similar News