கமலின் சர்ச்சை பேச்சு.... திரைபிரபலங்கள் குரல் கொடுக்கலையே... இதான் காரணமா?
மணிரத்னம், கமல், சிம்பு, ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் முதன் முறையாக இணையும் தக் லைஃப் படம் வரும் ஜூன் 5ல் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. தற்போது படத்திற்கான புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கின்றன. தக் லைஃப் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்து வந்ததுதான் கன்னடம் என பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமாரைப் பார்த்துப் பேசினார்.
இது பெரிய அளவில் சர்ச்சையைக் கிளப்பியது. இதற்கு கர்நாடக முதல்வர் சித்தாராமையா கூட கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். அதே நேரம் கமல் நான் சொன்னதில் எந்தத் தவறும் கிடையாது. அன்பு ஒரு போதும் மன்னிப்பு கேட்காது என்று திட்டவட்டமாகக் கூறி இருந்தார். கர்நாடகாவில் ;தக் லைஃப் படத்தை திரையிட மாட்டோம் என்றும் அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அங்கு வைக்கப்பட்டு இருந்த படத்தின் பேனர்களும் கிழித்தெறியப்பட்டன.
இந்நிலையில் இதுகுறித்து பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் ஒரு சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
கன்னடர்களுக்கு அவங்க மொழி தான் மூத்த மொழி என்ற எண்ணம் இருக்கும். அங்கு பிறந்து வளர்ந்த தமிழர்களுக்குக் கூட அப்படி எண்ணம் இருக்கும். ஆனால் இதன் உண்மைத்தன்மையைச் சொல்ல வேண்டிய கடமை நம் அரசுக்கு இருக்கிறது. அந்த வகையில் அவர்களும் பெரிசாக அதில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. நல்லவேளையாக நடிகர் சங்கம் ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளது.
இன்னும் கூட தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், நடப்புத் தயாரிப்பாளர் சங்கம் எல்லாம் இருக்கு. இவங்களும் கமலுக்கு ஆதரவாக அறிக்கை விட்டிருக்கலாம். அப்படி வெளியிட்டால் இன்னும் கொஞ்சம் தெம்பாக இருக்கும்.
கர்நாடகாவில் தக் லைஃப் ரிலீஸ் அன்று படம் ஓடிடியில் ஒருநாள் மட்டும் ரிலீஸ் ஆகும்னு அங்குள்ள ரசிகர்கள் நம்பிக் கொண்டு இருந்தார்கள். அதுவும் இல்லை என்பது தெளிவாகி உள்ளது. கமலுக்கு ஆதரவாக சீமான், வேல்முருகன் போன்ற கட்சித்தலைவர்களும் ஆதரவு கொடுத்துள்ளனர்.
அரசியலைத் தாண்டியும் இவர்கள் கமலுக்கு ஆதரவாக நிற்கிறார்கள். ஆனால் திரைத்துறையைச் சார்ந்த பிரபலங்கள் இன்னும் குரல் கொடுக்கவில்லை. இதற்கு காரணம் என்னன்னா நம்ம படமும் அங்கே ரிலீஸ் ஆகப்போகுது. நம்ம ஏதாவது குரல் கொடுத்து நம்ம படத்துக்கும் அங்கே பிரச்சனை வந்தா என்னாகுறதுன்னு யோசிக்கிறாங்க போல. எல்லாமே பணம் பணம் பணம். அதைத் தொடர்ந்து ஒண்ணுமே இல்லங்கற மாதிரி இன்னைக்கு ஆகிடுச்சு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.