இதுக்குத்தான் நயன்தாரா எஸ்கேப்பா!.. தாத்தா ஆகணும்னு சொல்லிட்டு பண்ற வேலையை பார்த்தீங்களா!..
ஜூன் 5ம் தேதி வெளியாகும் தக் லைஃப் வெற்றி பெறுவது உறுதி என கமல்ஹாசன் ரசிகர்கள் டிரைலரை ஒரு பக்கம் வைரலாக்கி வருகின்றனர்.;
நாயகன் படத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து மணிரத்னத்துடன் கமல்ஹாசன் இணைந்துள்ள படம் தான் தக் லைஃப். படத்தின் டிரைலர் வெளியான நிலையில், கமல்ஹாசன் மற்றும் சிம்பு வாயில் ரத்தம் வரும் அளவுக்கு ஒருவரை ஒருவர் கொலை வெறியுடன் தாக்கிக் கொள்கின்றனர். விஜய், மோகன்லால் நடித்த ஜில்லா படத்தின் உல்டா ரீமேக்கா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
இது ஒரு பக்கம் இருந்தாலும், படத்தில் ரசிகர்களை கவர்ந்த விஷயம் என்றால் விருமாண்டி படத்துக்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து மீண்டும் அபிராமியுடன் கமல்ஹாசன் இணைந்துள்ள நிலையில், பச்செக்கென கொடுக்கும் அந்த லிப் லாக் முத்தமும் படத்தின் வியாபாரத்திற்காக அதனை டிரைலரில் வைத்த விதமும் தான்.
மணிரத்னம் இயக்கத்தில் இதுவரை நயன்தாரா நடிக்கவே இல்லை. த்ரிஷா ஆயுத எழுத்து, பொன்னியின் செல்வன் படங்களில் நடித்து விட்டார். ஜோதிகா கூட செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்திருந்தார். கமல்ஹாசன், மணிரத்னம் படத்தில் முதலில் நயன்தாரா கமிட் ஆவதாக இருந்தது. ஆனால், இப்படியொரு கதாபாத்திரம் என்பதை கேட்டுத்தான் அவர் நோ சொல்லியிருப்பார் என தற்போது நயன்தாரா ரசிகர்கள் த்ரிஷாவை கலாய்த்து வருகின்றனர்.
ஸ்ருதிஹாசன் திருமணம் செய்யாமல் பாய் ஃபிரெண்டுகளை மாற்றி வரும் நிலையில், மேடையிலேயே மகள் மனசு வச்சிருந்தா இன்னேரம் தாத்தா ஆகியிருப்பேன் என்றார். இந்த வயதிலும் முத்தக் காட்சிகள் மற்றும் ஒன்றுக்கு 2 ஹீரோயின்கள் என விண்வெளி நாயகன் விளையாடி இருக்காரே. ஜூன் 5ம் தேதி வெளியாகும் தக் லைஃப் வெற்றி பெறுவது உறுதி என கமல்ஹாசன் ரசிகர்கள் டிரைலரை ஒரு பக்கம் வைரலாக்கினாலும், ரஜினிகாந்த் ரசிகர்கள் கமல்ஹாசனின் மன்மத லீலைகளை வைரலாக்கி கழுவி ஊற்றி வருகின்றனர்.