Singappenne:ஆனந்தியைக் கட்டிக்கப் போறாருன்னதும் சுயம்புவின் சட்டையைப் பிடித்த அன்பு.. கோகிலா கல்யாணம் நடக்குமா?
சிங்கப்பெண்ணே டிவி தொடர் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டு இருக்கிறது. இன்றைய எபிசோடில் என்ன நடந்ததுன்னு பார்க்கலாமா... கோகிலாவிடம் ஆனந்தி பூசாரி வீடு பார்த்து ஓகே பண்ணிவிட்டதை சொல்கிறாள். ஒரு மணி நேரத்துல வீட்டை சுத்தம் பண்ணிடுறேன்னு சொல்கிறாள். அதே நேரம் சுயம்பு சேகரிடம் வரவர ஆனந்தி நடவடிக்கை சரியில்லன்னு சொல்கிறான்.
அதற்கு சேகர் அண்ணே நீங்க கல்யாணத்தை தடுத்து நிறுத்துங்க. அப்பதான் கோகிலா எனக்கு கிடைப்பாள்;னு சொல்கிறான். அதற்கு அடச் சீ துப்புக்கெட்டவனே. அந்தப் பட்டிக்காட்டு கிராமத்துப் பொண்ணை உன்னால உஷார் பண்ண முடியல. உனக்காக செங்கல் சூளை எல்லாம் தந்தேன். இனிமே உனக்கு கோகிலா கிடைக்க மாட்டாள். அவள் கல்யாணம் நடந்தா தான் ஆனந்திக்கு என் மேல நம்பிக்கை வரும். அப்போதுதான் என் திட்டமும் நிறைவேறும்னு சுயம்பு சொல்கிறான்.
இது சேகருக்கு அதிருப்தியைத் தருகிறது. இனி அண்ணனை நம்பி பிரயோஜனம் இல்லை. நம்ம வேலையைக் காட்டிட வேண்டியதுதான்னு சேகர் முடிவு பண்றான். இதற்கிடையில் அன்பு ஆனந்தி வீட்டு கல்யாணத்துக்கு 2 நாளைக்கு முன்பே கிளம்புவதற்கு வீட்டில் அம்மா லலிதா எதிர்ப்பு தெரிவிக்கிறாள். அவளுக்கு துளசி எப்படியோ சொல்லி சமாதானப்படுத்தி அன்புவை வழியனுப்பி வைக்கிறாள்.
லலிதாவோ ஆனந்தியை நான் தான் முதல்ல என் வீட்டு மருமகள்னு சொன்னேன். ஆனால் அவளோட நடவடிக்கை பிடிக்கல. அதை ஏத்துக்க மனசு தயங்குது. துளசி சொல்றதை நான் நம்புறேன். அதனாலதான் பொறுமையா இருக்கேன்னு லலிதா சொல்லி முடிக்கிறாள். அதே நேரம் நான் சொன்ன மாதிரி கோகிலா கல்யாணம் முடிஞ்சதும் ஆனந்தி மனசு மாறலன்னா துளசி தான் மருமகள்னு திட்டவட்டமாக சொல்கிறாள் லலிதா.
துளசி அன்புவிடம் வழியனுப்பும்போது நான் சொன்னதை மறந்துடாதேன்னு சொல்கிறாள். ஆனந்தி வீட்டை சுத்தப்படுத்தி மாப்பிள்ளை வீட்டாரை வரவழைக்கிறாள். அழகப்பனும் வீட்டைச் சுற்றிக் காட்டுகிறார். அப்போது மாப்பிள்ளை அண்ணி இந்த வீடு ரொம்ப பழசா இருக்கு. நாம காரைக்குடியிலயாவது தங்கிருக்கலாம். அங்கே பெரிய வீடா இருக்கும்னு சொல்கிறாள்.
பொண்டாட்டிப் பேச்சைக் கேட்டாதானேன்னு கோபப்படுகிறாள். இதைக் கேட்கும் அழகப்பன் கடைசி நேரத்துல நீங்க திடீர்னு வந்ததால எங்களால வேற இடத்தை அரேஞ்ச் பண்ண முடியலன்னு சொல்கிறார். அதே நேரம் சம்பந்தி அவன் கிடக்குறான். இந்த வீடு எங்களுக்கு ரொம்ப பிடிச்சிடுச்சு. மங்களகரமா இருக்குன்னு சொல்கிறார்.
ஆனந்தி சுத்தம் பண்ணினதால வீடு மங்களகரமா இருக்கு என்பதை அழகப்பன் சொல்கிறார். அதே நேரம் மாப்பிள்ளை அம்மாவின் தங்கை வைதேகிக்கு ஆனந்தியை ரொம்பவே பிடித்து விடுகிறது. அவளது மகன் சந்தோஷூக்கு ஆனந்தியைப் பொண்ணு கேட்க திட்டம்போடுகிறாள். ஆனந்தியின் சுறுசுறுப்பையும் வேலையையும் பார்த்து அவள் தான் தன் மருமகள் என்பதில் உறுதியா இருக்கிறாள்.
இதற்கிடையில் அன்பு நடந்து வந்து கொண்டு இருக்கிறான். சுயம்புவும், சேகரும் பார்த்து விடுகிறார்கள். பைக்கில் ஏறச் சொல்கிறான் சுயம்பு. அன்புவுக்கு அவனது பேச்சு பிடிக்காமல் ஏற மறுக்கிறான். என்னைப் பத்தி சொல்லுன்னு சேகரிடம் சொல்கிறான் சுயம்பு. அப்போது சேகர் ஆனந்தியை அண்ணன்தான் கட்டிக்கப்போறாருன்ன சொல்ல அன்பு பைக்கில் இருக்கும் சுயம்புவின் சட்டையைப் பிடிக்கிறான். இதை சற்றும் எதிர்பார்க்காத சுயம்பு அடுத்து என்ன செய்யப் போகிறான் என்று நாளைய எபிசோடில் பார்க்கலாம்.