செந்தூரப்பூவேல என்னைக் கூட்டி வந்து விட்டதே விஜயகாந்த் தான்... பழசை மறக்காத நிரோஷா!
விஜயகாந்த் மறைவுக்குப் பிறகுதான் அவரைப் பற்றிய ஏராளமான நல்ல சேதிகள் வெளியே வந்தவண்ணம் உள்ளன. இதுவரை பல நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், சண்டைக்கலைஞர்கள், கதாசிரியர்கள், கவிஞர்கள், பாடகர்கள் என பலரும் விஜயகாந்தைப் பற்றிப் பல நெகிழ்ச்சியான தகவல்களைச் சொல்லி விட்டனர். அந்த வகையில் பிரபல நடிகை நிரோஷாவும் சில தகவல்களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.
கேப்டன் திருப்பி வருவாங்களான்னு தெரியல. இன்னைக்கு நான் இங்க நிக்கிறன்னா அது கேப்டன் சாராலதான். எப்படி மணிரத்னம் சார் என்னை அறிமுகப்படுத்தினாரோ அப்படி செந்தூரப்பூவேல என்னைக் கூட்டிட்டு வந்து விட்டதே அவருதான். ஆபாவாணன் சாருக்கிட்ட நிரோஷான்னு ஒரு நடிகை வந்துருக்கா அவரைப் போடுங்க கரெக்டா இருக்கும்னு அவருதான் சொன்னாரு. செந்தூரப்பூவே படம் பேரு வாங்குனது அவரு மூலமாகத் தான். நான் மூணு படம் ஒர்க் பண்ணிருக்கேன்.
அவருக்கு ஜோடியாகவும் நடிச்சிருக்கேன். இப்படி ஒரு மனிதநேயமிக்க ஆளைப் பார்த்ததே இல்லை. எல்லாரும் பணம் சம்பாதிப்பாங்க. பேர் சம்பாதிப்பாங்க. ஒரு நல்ல ஹியூமன் பீயிங்கை சம்பாதிக்கிறது மகா கஷ்டமான விஷயம். இன்னைக்கு நாங்க எல்லாரும் அவரை மிஸ் பண்றோம். கண்டிப்பா இந்த இன்டஸ்ட்ரிக்கு இழப்புதான்.
ஒரு நடிகருக்கு ஒரு பிரச்சனைன்னா அவரைத் தவிர வேறு யாருக்கிட்டேயுமே போய் அப்ரோச் பண்ண முடியாது. அவருன்னா இன்னைக்கு இறங்கி வேலை செய்வாரு. எல்லாமே நடக்கும். ஒரு நடிகருக்கு என்ன தேவையோ மொத்தத்தையும் செஞ்சிக் கொடுப்பாரு. அவரும் இருந்துருந்தா மக்களுக்கு நிறைய செஞ்சிருப்பாருன்னு கண்டிப்பா நான் நம்புறேன் என்றார் நிரோஷா.
1988ல் ஆர்.ஆர்.தேவராஜ் இயக்கத்தில் விஜயகாந்த், ராம்கி, நிரோஷா நடித்த படம் செந்தூரப்பூவே. மனோஜ் கியான் இசை அமைத்துள்ளார். பாடல்கள் எல்லாமே சூப்பர். செந்தூரப்பூவே, சோதனை தீரவில்லை, சின்ன கண்ணன், கிளியே இளங்கிளியே, வாடி புள்ள, வரப்பே தலையானே, முத்து மணி பல்லாக்கு, ஆத்துக்குள்ளே ஏலேலோ ஆகிய இனிய பாடல்கள் உள்ளன. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இது ஒரு ஆக்ஷன் லவ் ஸ்டோரி.