சரத்குமாரும் சித்தார்த்தும் சொந்த வீடு வாங்கினார்களா?.. 3 BHK படம் எப்படி இருக்கு?.. இதோ விமர்சனம்!
கடைசியாக வீடு வாங்கினார்களா? இல்லையா? என்கிற கிளைமேக்ஸ் உடன் பக்காவாக முடித்திருக்கும் இந்த படத்தை தாராளமாக தியேட்டரில் பார்க்கலாம்.;
சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்கிற கனவுடன் இருக்கும் சரத்குமாருக்கு இந்த படத்தில் மனைவியாக தேவயானி நடித்திருக்கிறார். மகனாக சித்தார்த்தும் மகளாக குட் நைட் பட ஹீரோயின் மீதா ரகுநாத் நடித்திருக்கிறார்.
8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் என ஆக்ஷன் படங்களை இயக்கி வந்த ஸ்ரீகணேஷ் துப்பாக்கி தோட்டாக்கள் சத்தமும் ரத்தமும் இல்லாமல் ஒரு அழகான குடும்ப டிராமா படத்தை எந்தளவுக்கு எமோஷன் கலந்துக் கட்டி கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு கொடுத்திருக்கிறார்.
வாசுதேவனாக குடும்ப பாரத்தை தாங்கி நிற்கும் குடும்பஸ்தன் கதாபாத்திரத்தில் நாட்டாமை சரத்குமார் நச்சென நடித்திருக்கிறார். வானம் கொட்டட்டும் படத்துக்குப் பிறகு இந்த படத்திலும் அவரது நடிப்பு பலராலும் பாராட்டுக்களை பெறும்.
சரத்குமாரின் மனைவியாக தேவயானி படத்துக்கு என்ன தேவையோ அதை கொடுத்து நடித்திருக்கிறார். எப்போதும் போல அவர் வந்தாலே ஸ்க்ரீனே பாசிட்டிவ் ஆகிவிடுவது போல இந்த படத்திலும் அவர் பிரெசன்ஸ் பாசிட்டிவாகவே உள்ளது.
படிப்பு வராத மாணவனாக யங் பாய் லுக்கில் இருந்து எப்படியாவது கஷ்டப்பட்டு வேலை செஞ்சாவது அப்பா நினைச்சதை நாம நிறைவேத்தனும் என தோனி ஃபேன் என சொல்லிக் கொண்டு அதற்கு ஏற்ப தனது கதாபாத்திரத்தில் பிரபுவாக கச்சிதமாக பிரமாதப்படுத்தியிருக்கிறார் சித்தார்த்.
சித்தா, 3பிஎச்கே என சித்தார்த் சமீப காலமாக எடுத்துள்ள ரூட் நல்லா இருக்கு, இதையே அவர் தொடர்ந்தால் அடுத்தடுத்த வெற்றிகளை ருசிக்கலாம். சொந்த வீடு வாங்க பல வருடங்களாக சரத்குமார் கஷ்டப்பட்டது போதாது என அடுத்து அவரது மகனும் கஷ்டப்பட கடைசியில் வீடு வாங்கும் தருவாயில், அப்பா சரத்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட சேர்த்து வைத்த காசெல்லாம் செலவாகும் இடங்கள் எல்லாம் பலரையும் கண் கலங்க வைத்துவிடும்.
கடைசியாக வீடு வாங்கினார்களா? இல்லையா? என்கிற கிளைமேக்ஸ் உடன் பக்காவாக முடித்திருக்கும் இந்த படத்தை தாராளமாக தியேட்டரில் பார்க்கலாம். ஒரு சில இடங்களில் ஒரு சில காட்சிகள் ஒட்டாமல் போகலாம். அல்லது, மிகைப்படுத்தலாக தெரியலாம். ஆனால், இயக்குனர் கதைக்கு தேவையான விஷயங்களே எழுதி இயக்கியிருக்கிறார். சொந்த வீடே சொர்க்கம்!
ரேட்டிங்: 3.75/5.