Karthi29: பீரியட் படம், பெரிய பட்ஜெட்... இயக்குனர் யாருன்னு பாருங்க!
தமிழ் சினிமாவின் மினிமம் கேரண்டி ஹீரோ என தாராளமாக கார்த்தியை சொல்லலாம். தற்போது 'வா வாத்தியாரே' படத்தில் பிசியாக இருக்கும் கார்த்தி கையில் 10 படங்களை வைத்திருக்கிறார். இதில் இருந்தே இயக்குனர்களுக்கு ஏற்ற ஹீரோவாக அவர் வலம்வருவதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
குறிப்பாக 'சர்தார் 2', 'கைதி 2' என பார்ட் படங்களிலும் மீண்டும் நடிக்கவிருக்கிறார். இதில் கைதி 2 படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஒரே மாதிரியாக இல்லாமல் வெரைட்டியாக நடிப்பது தான் கார்த்தியின் பிளஸ். சில படங்கள் அண்மையில் சறுக்கினாலும் 'மெய்யழகன்' மூலம் மீண்டு வந்துவிட்டார்.
இந்தநிலையில் அவரின் 29வது படம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி விக்ரம் பிரபுவிற்கு 'டாணாக்காரன்' மூலம் கம்பேக் கொடுத்த தமிழ் தான் இப்படத்தை இயக்குகிறார். இப்படம் பீரியட் படமாக உருவாகவுள்ளது. 1960ம் ஆண்டு ராமேஸ்வரம் பின்னணியில் நடைபெறுவது போல படத்தின் கதையை தமிழ் எழுதி இருக்கிறாராம். இதில் வெறித்தமான கேங்ஸ்டராக கார்த்தி நடிக்கவுள்ளார்.
கார்த்தியின் திரைப்பயணத்தில் மிகப்பெரும் திருப்புமுனை கொடுத்த 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தை காட்டிலும் பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை எடுக்க இருக்கிறார்களாம். மார்ச் 2025ல் படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளது. இதையடுத்து ஆகஸ்ட் மாதம் 'கைதி 2' படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் கார்த்தி இணைகிறார். இதனால் அடுத்த சில ஆண்டுகளுக்கு கார்த்தியின் காட்டில் தான் அடைமழை தான் பாஸ்!