என்னாமா டேன்ஸ் ஆடுறாரு கவுதம் மேனன்!.. ‘ரைஸ் ஆப் டிராகன்’ பாட்டு செம வைப்!...
Dragon first single: கோமாளி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகாமனவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி ஹீரோவாக நடித்த அப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின் அவர் எழுதி, இயக்கி, நடித்த திரைப்படம்தான் லவ் டுடே. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்தில் இவானா, ராதிகா, சத்தியராஜ், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
10 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 80 கோடிக்கும் மேல் வசூல் செய்து தயாரிப்பாளருக்கு சூப்பர் லாபத்தை கொடுத்தது. லவ் டுடே திரைப்படம் தெலுங்கு மொழியில் டப் செய்யப்பட்டு அங்கும் இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள். எனவே, பிரதீப் ரங்கநாதனின் மார்கெட் வேல்யூ கூடியது.
விஜயின் படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தும் இனிமேல் நான் இயக்கும் படத்துக்கு நான்தான் ஹீரோ என சொன்னார் என செய்திகள் வெளியானது. ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் என்கிற படத்திலும், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்.ஐ.கே என்கிற படத்திலும் நடிக்க துவங்கினார்.
இந்நிலையில்தான், டிராகன் படத்தில் ஃபர்ஸ்ட் சிங்கிளாக 'Rise of Dragaon' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அனிருத் இசையில் இந்த பாடல் செம வைப்பாக வந்துள்ளது. இந்த பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதி இருக்கிறார். லாஸ் எல்லாம் மாஸாக மாறும். நம்ம வாழ்க்கை வேற மாதிரி மாறும் என இளைஞர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும்படியான பல வரிகள் இப்பாடலில் இடம் பெற்றிருக்கிறது.
இந்த பாடலை அனிருத் அசத்தலாக பாடியிருக்கிறார். இந்த பாடலுக்கு பிரதீப் செம ஆட்டமும் போட்டிருக்கிறது. இதில் என்ன ஆச்சர்யம் என்னவெனில், இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ள கவுதம் மேனனும் இந்த பாடலில் அசத்தலாக நடனம் ஆடியிருப்பது ரசிகர்களிடம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.