நெருப்பு தானா அடங்கட்டும்.. சாதிய இயக்குனர்களுக்கு தக்க சவுக்கடி கொடுத்த பாலா

By :  Rohini
Update: 2025-01-04 14:52 GMT

bala

சாதிய படங்கள்:

சாதியை ஒழிப்போம் என்று பல தலைவர்கள் போர்க்கொடி தூக்கி போராடியதை எல்லாம் நாம் கேட்டிருக்கிறோம். ஏன் சாதியே எங்களுக்கு வேண்டாம் என்று பெரும்பாலானோர் தங்கள் குழந்தைகளுக்கு சான்றிதழில் சாதி பெயர் போட மறுத்து வருகின்றனர். இப்படி உலகம் மாறி கொண்டு வர எங்கள் சாதி எந்தளவுக்கு பாதிக்கப்படுகிறது? எங்கள் சாதியின மக்கள் ஆதிக்க சாதியினரால் எப்படி துன்புறுத்தப்பட்டனர் என்பதை சமீபகாலமாக படங்களில் காட்டி வருகின்றனர்.

இக்கால குழந்தைகளுக்கு சாதி என்றால் என்ன என்பதே தெரிய கூடாது என்பதுதான் பல பேரின் விழிப்புணர்வாக இருக்கிறது. அப்படி இருக்க ஒரு சில இயக்குனர்கள் சாதியை மையமாக வைத்து படங்களை இயக்கி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக பல பேர் குரலும் கொடுத்து வருகின்றனர். ஆனால் பாதிக்கப்பட்டது நாங்கள்.. எங்கள் வலி எங்களுக்குத்தான் தெரியும்.. அதை இப்படி காட்டினால்தான் மக்களுக்கு புரியும் என்று அந்த இயக்குனர்களும் சப்ப கட்டு கட்டுகின்றனர்.

பாலாவின் சவுக்கடி பதில்:

இந்த நிலையில் இயக்குனர் பாலா அந்த மாதிரி படம் எடுக்கும் இயக்குனர்களுக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார். பாலாவிடம் சாதி பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு ‘சாதி என்ற ஒன்று இருந்தால்தானே கருத்து சொல்ல முடியும்’ என்று பதில் கூறியிருக்கிறார். இல்லைனு சொல்றீங்களா? சாதியை தழுவி பல படங்கள் இப்போது வருகின்றதே என்று இன்னொரு கேள்வியும் பாலாவிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பாலா ‘சாதி இருக்குனு இவங்களே சொல்லிக்கிட்டா எப்படி?’ என கேட்டிருப்பார். மேலும் அவரிடம் ‘ நீங்க ஆசைப்பட்டிருக்கிறீர்களா? ரொம்ப ஆணித்தரமா இந்த மாதிரி ஒரு படத்தை எடுக்கனும்னு?’என்ற கேள்வியும் கேட்கப்பட்டது. அதற்கு பாலா ‘தேவையில்லாம அத எடுத்து அந்த நெருப்ப நான் கிளறி விட விரும்பல. அந்த நெருப்பு தானா அடங்கட்டும்’ என நச்சுனு பதில் அளித்திருக்கிறார் பாலா.

இந்த பேட்டியை பார்த்த அனைவரும் பா. ரஞ்சித் மற்றும் மார் செல்வராஜை டேக் செய்து பாலாவிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்.இனிமேலாவது சாதியை மையமாக வைத்து படத்தை எடுக்க முயற்சி பண்ணாதீங்க என கமெண்ட்களில் கூறி வருகிறார்கள்.

Tags:    

Similar News