வசனம் பேச முடியாமல் மறந்து நின்ற விஜயகாந்த்!.. மீண்டு வந்தது இப்படித்தான்!...

By :  Murugan
Update: 2025-01-06 16:30 GMT

Vijayakanth: விஜயகாந்த் என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அவரின் கம்பீரமான குரலும், வசனம் பேசும் அவரின் ஸ்டைலும்தான். சினிமாவில் விஜயகாந்த் போல அசத்தலான வசனங்களை பேசியது யாருமில்லை. காவல்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள் செய்யும் ஊழல்கள். நீதிமன்றங்கள், சட்டத்தில் உள்ள ஓட்டைகள் என பல விஷயங்களை அவர் பேசியிருக்கிறார்.

ஊமை விழிகள் படத்தில் பேசாமல் நடித்தால் கேப்டன் பிரபாகரன் படத்தில் படம் முழுக்க பேசி நடித்திருப்பார். அதுவும், அந்த படத்தில் நீதிமன்ற காட்சிகளில் விஜயகாந்த் அனல் பறக்கும் வசனங்களை பேசியிருப்பார். ஏ மற்றும் பி சென்டர்களில் விஜயகாந்த் பிரபலமானதே வசனங்கள் மற்றும் சண்டை காட்சிகளால்தான்.

ஏழை ஜாதி, கேப்டன் பிரபாகரன் போன்ற படங்களில் அசத்தலான அரசியல் வசனங்கள் இடம் பெற்றிருக்கும். அந்த வசனங்களை விஜயகாந்துக்காக எழுதியது வசனகர்த்தா லியாகத் அலிகான். விஜயகாந்துக்கு இதை துவங்கி வைத்தது விஜயின் அப்பாவும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர்தான். 80களில் இவர் இயக்கிய படங்களில் அனல் பறக்கும் வசனங்கள் இருக்கும்.


இவரின் படங்களிலும் காவல்துறை, சட்டத்துறை, அரசியல்வாதிகள் மற்றும் ஊழலுக்கு எதிராக பல வசனங்கள் இடம் பெற்றிருக்கும். விஜயகாந்தை வைத்து இவர் இயக்கி முதல படத்தின் தலைப்பே சட்டம் ஒரு இருட்டறைதான். இதுதான் விஜயகாந்துக்கு முதல் ஹிட் திரைப்படமும் கூட.

ஆனால், அதே விஜயகாந்த் வசனங்களை பேச முடியாமல் நின்ற சம்பவம் பற்றி இங்கு பார்ப்போம். விஜயகாந்தை வைத்து பூந்தோட்ட காவல்காரன் படத்தை இயக்கிய செந்தில்நாதன் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘நானும் எஸ்.ஏ.சநதிரசேகரும் 1979ம் வருடம் ரிலீஸான ’மேட் மேக்ஸ்’ படத்தை பார்த்தோம். இதுபோன்ற படத்தை தமிழில் எடுக்க முடியுமா என யோசித்து எஸ்.ஏ.சி ஒரு கதை எழுதினார்.

அதில், விஜயகாந்த் நடிப்பது என முடிவானது. அப்போது 2 வருடங்கள் விஜயகாந்த் நடிக்காமல் இருந்தார். படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் ஆக்சன் சொன்னதும் வசனங்களை பேச முடியாமல் அப்படியே நின்றார். இயக்குனருக்கே அவர் மீது சந்தேகம் வந்துவிட்டது. ‘இது சரியா வராது’ என சொன்னார். நானோ ‘இல்ல சார் கண்டிப்பாக பேசிவிடுவார்’ என சொன்னேன்.

அப்போது விஜயகாந்த் ‘சார் இன்னைக்கு என்ன விட்ருங்க. ஒரு நாள் டைம் கொடுங்க. வசன பேப்பரையும் என்கிட்ட கொடுங்க.. நாளைக்கு வந்து பேசுறேன்’ என சொல்லிவிட்டு போனார். அடுத்த நாள் எஸ்.ஏ.சி. ஆக்சன் சொன்னதும் பழைய விஜயகாந்தாக மாறி வசனங்களை ஒரே டேக்கில் பேசி நடித்தார். எல்லோருமே கை தட்டினார்கள்’ என அவர் சொல்லியிருந்தார்.

Tags:    

Similar News