கதாநாயகியாக ஜெயலலிதாவை சிபாரிசு செய்த எம்ஜிஆர்... கண்டுகொள்ளாத தயாரிப்பு நிறுவனம்!
ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்துக்காகவும், இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தருக்காகவும் எம்ஜிஆர் நடித்த ஒரே படம் அன்பே வா.
அன்பே வா படத்தை முதலில் ஜெய்சங்கரை வைத்துத் தான் எடுக்கலாம்னு நினைச்சாங்களாம். ஏவிஎம்.சரவணன் எம்ஜிஆரின் தீவிர ரசிகர். அவர் ஒரு படத்துலயாவது எம்ஜிஆரை நடிக்க வைக்கணும்னு நினைச்சாராம். அதனால் ஏ.சி.திருலோகசந்தரை கதை சொல்ல எம்ஜிஆரிடம் அனுப்புகிறார்.
அவர் 'கம் செப்டம்பர்' என்ற ஆங்கிலப்பட பாணியில் ஒரு கதையை சொல்கிறார். அதை எம்ஜிஆரை மைண்ட்ல வச்சி அவர் உருவாக்கிய படம். அது எம்ஜிஆருக்கும் பிடித்து விடுகிறது. இது என்னோட படமே இல்ல. திருலோகசந்தரின் படம்தான்னு சொல்றாரு.
இந்தப் படத்தில் திருலோகசந்தருக்கு சம்பளம் 70 ஆயிரம். இந்தப் படத்துக்கு அசிஸ்டண்ட் டைரக்டராக வேலை பார்த்தவர் பின்னாளில் மிகப்பெரிய இயக்குனராக வலம் வந்த எஸ்.பி.முத்துராமன்.
இந்தப் படத்தில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றிய ஏ.கே.சோப்ராவுக்கு அசிஸ்டண்டாக இருந்தவர் பின்னாளில் பெரிய டான்ஸ் மாஸ்டராக வலம் வந்த ரகுராம். இந்தப் படத்துல எம்எஸ்வி. அவருக்கிட்ட கேட்டீங்களா? அவருக்கு 'ஓகேவா'ன்னு எம்ஜிஆருக்கு ஒவ்வொரு பாட்டும் முடிந்தபிறகு போட்டுக் கேட்டாங்களாம்.
\இதை ஏன் எங்கிட்ட கேட்குறீங்க. செட்டியாருக்கு ஓகேன்னா எனக்கு ஓகே'ன்னு எம்ஜிஆர் சொல்வாராம். இந்தப் படம் வழக்கமான எம்ஜிஆர் படமாக இருக்காது. பாடல்கள் எல்லாம் சூப்பராக இருக்கும். இந்தப் படத்துக்கு எம்ஜிஆருக்கு 3 லட்சம் சம்பளம். அப்புறம் எக்ஸ்ட்ராவா 25 ஆயிரம் எம்ஜிஆர் கேட்டதற்காக சேர்த்துக் கொடுத்தார்களாம்.
வழக்கமாக எம்ஜிஆர் தனது படங்களில் கேரக்டர்களுக்கு நடிகர்களை அவர்தான் தேர்ந்தெடுப்பாராம். ஆனால் இந்தப் படத்தில் எம்ஜிஆர் கதாநாயகியாக ஜெயலலிதாவைப் போடலாம்னு சொன்னாராம். ஆனால் ஏவிஎம் நிறுவனம் சரோஜாதேவியை கதாநாயகியாக நடிக்க வைத்தனர். அவரது சம்பளம் 90 ஆயிரம் ரூபாய்.
இந்தப் படத்தில் கதாநாயகியின் தந்தையாக தங்கவேலுவை நடிக்க வைக்கலாம்னு எம்ஜிஆர் சொல்லி இருக்கிறார். ஆனால் அந்தக் கேரக்டரில் டி.ஆர்.ராமச்சந்திரனை நடிக்க வைத்துள்ளார்கள். ஆனா எல்லா இடத்திலும் செட்டியார் சொல்லிட்டா ஓகேன்னு சொன்னாராம் எம்ஜிஆர். 'நான் எனது கருத்தாகத் தான் சொல்கிறேன்.
மற்றபடி இது உங்க படம்தான்'னு எம்ஜிஆர் படம் முழுவதையும் ஏவிஎம் நிறுவனத்திடமே ஒப்படைத்தாராம். இதுதான் ஏவிஎம் தயாரித்த முதல் ஈஸ்ட்மென்ட் கலர் படம். படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு ஊட்டியில் நடந்ததாம். அவ்வளவு குளிரிலும் வியர்க்க விறுவிறுக்க எம்ஜிஆர் உடற்பயிற்சி செய்வாராம்.
இந்தப் பட யூனிட்ல இருக்குற எல்லாருக்கும் ஸ்வெட்டர், மங்கி குல்லாவை இலவசமாக எம்ஜிஆர் வழங்கியுள்ளார். இந்தப் படத்தில் டிஆர்.ராமச்சந்திரன் ஒரு காட்சியில் சிக்கன் சாப்பிடணும். ஆனா அவர் வெஜிடேரியன் என்பதால் சிக்கன் மாதிரி ஒரு கேக்கை சாப்பிட வைத்தார்களாம்.