லைக்காவை காலி செய்த கோலிவுட்!.. சீக்கிரம் கடைய சாத்த போறாங்களாம்!..

By :  Murugan
Update: 2025-01-06 17:30 GMT

Lyca Production: சினிமா கோடிகளை குவிக்கும் தொழில் என்பதால் பல கார்ப்பரேட் கம்பெனிகளும் சினிமா எடுக்க முன் வந்தன. அப்படி கோலிவுட்டில் கடை விரித்த நிறுவனம்தான் லைக்கா. இலங்கை தமிழரான சுபாஷ்கரனின் நிறுவனம் இது. சினிமா இவர்களுக்கு முதன்மையான தொழில் இல்லை. லண்டனில் செல்போன் நெட்வொர்க் உள்ளிட்ட சில தொழிகளில் கொடி கட்டி பறக்கிறார்கள்.

சினிமாவில் லாபத்தை மட்டுமே பார்க்க முடியாது. பல வருடங்கள் வித்தை கற்ற தயாரிப்பாளர்களே சில சமயம் நஷ்டத்தை சந்திப்பார்கள். கடந்த சில வருடங்களாகவே நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வருகிறது லைக்கா. பொதுவாக, நிறைய பணத்தோடு ஒரு தயாரிப்பாளர் புதிதாக வந்திருப்பது தெரிந்தாலே பெரிய இயக்குனர்களும், பெரிய ஹீரோக்களும் அவர்களை பயன்படுத்திக்கொள்வார்கள்.


ஏனெனில், பெரிய நடிகர்கள் கேட்கும் 100,150 கோடி சம்பளத்தை கார்ப்பரேட் நிறுவனங்களால் மட்டுமே கொடுக்க முடியும். படம் ஓடியதா?. தயாரிப்பாளருக்கு லாபமா? என்றெல்லாம் அவர்கள் யோசிக்க மாட்டார்கள். தங்களுக்கு சம்பளம் வந்துவிட்டதா என்பதில் மட்டுமே குறியாக இருப்பார்கள். அதேபோல், பெரிய இயக்குனர்கள் அதிக பட்ஜெட்டுகளில் படமெடுக்க கார்ப்பரேட் நிறுவனங்களை பயன்படுத்தி தங்கள் பங்குக்கு காலி செய்வார்கள்.

சுபாஷ்கரனின் லைக்கா நிறுவனம் இந்த இரண்டிலுமே சிக்கியது. கத்தி படம் மூலம்தான் இந்நிறுவனம் சினிமாவில் நுழைந்தது. பல படங்களை தயாரித்தாலும் கோலமாவு கோகிலா, செக்கச் சிவந்த வானம், வட சென்னை, 2.0. டான், பொன்னியின் செல்வன் முதல் பாகம் ஆகிய படங்கள் மட்டுமே அவர்களுக்கு லாபத்தை கொடுத்தது.

ரஜினியை வைத்து லைக்கா தயாரித்த தர்பார், லால் சலாம், வேட்டையன் போன்ற படங்கள் ஓடவில்லை. அதேபோல், இந்தியன் 2 படமும் ஊத்திக்கொண்டது. இந்த படங்களால் லைக்காவுக்கு பல கோடிகள் நஷ்டம். இதனால், அஜித்தை வைத்து தயாரித்த விடாமுயற்சி படத்தையும் ரிலீஸ் செய்ய முடியவில்லை.


இப்போது இந்தியன் 3 படத்தை முடிக்காமல் ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்ய அனுமதிக்கக் கூடாது என லைக்கா நிறுவனம் புகார் கொடுத்திருக்கிறது. சினிமா மீது இருந்த ஆர்வத்தில் நிறைய கனவோடு சுபாஷ்கரன் இந்த தொழிலில் முதலீடு செய்தார். ஆனால், தொடர் தோல்விகள் அவரை கவலையடைய செய்திருக்கிறது. எனவே, விரைவில் லைக்கா நிறுவனம் சினிமா தொழிலுக்கு முழுக்கு போடவும் முடிவெடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

ரஜினி போன்ற பெரிய நடிகர்களுக்கும், ஷங்கர் போன்ற இயக்குனர்களும் இதனால் கவலைப்படப்போவதில்லை. ஏனெனில், தாங்கள் கேட்கும் சம்பளத்தை கொடுப்பதற்கு தயாராக இருக்கும் வேறு தயாரிப்பாளர் பக்கம் அவர்கள் போய்விடுவார்கள். நஷ்டம் என்பது எப்போதும் தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே!...

Tags:    

Similar News