படப்பிடிப்பில் ஓவர் அலப்பறை பண்ணும் எஸ்.கே!.. அமரனுக்கு பின்ன ஆட்டம் ஓவரா இருக்கே!..
நடிகர் சிவகார்த்திகேயன்: தமிழ் சினிமாவில் அமரன் திரைப்படத்திற்கு பிறகு தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி வைத்திருக்கின்றார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் அமரன் திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். படம் கடந்த தீபாவளி பண்டிகைக்கு வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
நம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியிருந்தார் ராஜ்குமார் பெரியசாமி. மேலும் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது. படம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று படம் பாக்ஸ் ஆபிஸில் 360 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
இதனால் தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் இமேஜ் உயர்ந்திருக்கின்றது. தொடர்ந்து அடுத்தடுத்து பெரிய பட்ஜெட்டில் பெரிய இயக்குனர்களின் திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார் நடிகர் சிவகார்த்திகேயன். அமரன் திரைப்படத்தை முடித்த கையோடு எஸ்கே 23 என்கின்ற திரைப்படத்தில் கமிட்டானார். இப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கி வருகின்றார்.
படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடைந்துள்ள நிலையில் சிறிது மட்டுமே பாக்கி இருப்பதாக கூறப்படுகின்றது. அதனை தொடர்ந்து டான் திரைப்படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் பாஸ் என்கிற திரைப்படத்தில் நடிப்பதற்கும் கமிட்டாகி இருக்கின்றார். இப்படத்தின் அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாகவே சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படமான எஸ்கே 25 திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகின்றார்.
இந்த திரைப்படத்தை இயக்குனர் சுதா கொங்காரா இயக்குகின்றார். 1965 காலகட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து படத்தை இயக்கி வருகிறார்கள். இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி, அதர்வா, நடிகை ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் தான் நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பச்சையப்பாஸ் கல்லூரிக்கு எதிரில் இருக்கும் ஒரு பள்ளியில் எடுக்கப்பட்டு வருகின்றதாம். ஒரு பழமை வாய்ந்த பள்ளி என்பதால் இந்த கதைக்கு சரியாக பொருத்தமாக இருக்கும் என்பதால் அங்கு படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் படப்பிடிப்பு தளத்தில் செய்யும் மற்றொரு அட்ராசிட்டி வெளிவந்திருக்கின்றது.
பொதுவாக படம் எடுக்கும் இடத்தில் நடிகர்களுக்கு கேரவன்கள் ஒதுக்குவது வழக்கம்தான். அப்படி சிவகார்த்திகேயன் கேரவனுக்கு அருகாமையில் மிகப்பெரிய ஆபீஸ் செட்டப் ஒன்று இருக்கின்றதாம். எதற்காக இந்த ஆபீஸ் செட்டப் என்று விசாரித்து பார்த்தால் சிவகார்த்திகேயனுடைய ஆபீஸ் தான் அங்கு போடப்பட்டிருக்கின்றதாம். சிவகார்த்திகேயன் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடிப்பதும் தயாரிப்பதுமாக இருந்து வரும் நிலையில் ஆபீஸ் வேலைகள் சரியாக நடக்கின்றதா? என்பதை கண்காணிப்பதற்காக அங்கு ஒரு ஆபீஸ் செட்டப்பை போட்டு வைத்திருக்கின்றார்.
காட்சிகளில் நடித்துவிட்டு திரும்ப கேரவனுக்கு வரும்போது ஆபீஸ் வேலைகளை பார்த்து விட்டு கேரவனுக்கு திரும்புகிறாராம். இதை பார்த்து அங்கிருந்தவர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டு போய் இருக்கிறார்கள். பெரிய பெரிய நடிகர்கள் கூட இப்படி எல்லாம் செய்வது கிடையாது. ஆனால் சிவகார்த்திகேயன் இப்படி செய்வது கொஞ்சம் ஓவர் தான் என்று கூறி வருகிறார்கள்.
மேலும் நடிகர் ஜெயம் ரவி இருக்கும் இடமே தெரியாமல் இருந்து வருகின்றார். தன்னுடன் இரண்டு நபர்கள், மேக்கப் மேன் மற்றும் டச் அப் பாய் இருவரை தவிர வேறு யாரையுமே அழைத்து வருவது கிடையாதாம். காட்சி முடிந்தால் கேரவனுக்கு சென்று அமைதியாக இருந்து விடுகின்றாராம். வருவதும் போவதும் தெரியாமல் ஜெயம் ரவி இருப்பதாக படப்பிடிப்பில் இருந்தவர்கள் கூறி வருகிறார்கள்.