பைட்... லவ்... சாங்... கிடையாது... ஆனா படம் நல்லாருக்கும்... கார்த்தி என்ன சொல்றாரு?

வாழ்க்கை ரொம்பவே அழகானது. அதன் கதாநாயகன் தான் மெய்யழகன்.

By :  sankaran
Update: 2024-09-22 17:12 GMT

actor karthi

மெய்யழகன் படத்தில் கார்த்தி, அரவிந்தசாமி இணைந்து நடித்துள்ளார்கள். பிரேம் குமார் இயக்க, சூர்யாவின் 2 டி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் கமல் 2 பாடல்களைப் பாடி அசத்தியுள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கார்த்தி பேசியது அருமையாக இருந்தது. என்ன பேசினார்னு பாருங்க.


மெய்யழகன்ல உள்ள எழுத்தை என்னால புரிஞ்சிக்க முடியுதுன்னா அதுக்குக் காரணம் உறவுகள் வீட்டுக்குப் போனது தான். நம்ம வாழ்க்கை வேற. நாம வாழ்நாள் முழுவதும் தைரியமா இருக்கணும்னா நமக்கு உறவுகள் ரொம்ப முக்கியம். பழக்கங்கள் ரொம்ப முக்கியம். மறுபடியும் இந்தப் படம் சொல்லிக் கொடுக்குது. நம்ம சமுதாயம் ரொம்ப முக்கியம்னு நினைக்கணும். எல்லாருடனும் பேரன்புடன் இருக்கும் பிரேம் இந்தப் படத்தை எங்கக் கிட்டக் கொண்டு வந்து கொடுத்ததுக்கு முதல்ல நன்றி சொல்லணும்.

இந்த மாதிரி திறமையான நபரை வெளியே கொண்டு வந்ததுக்கு விஜய்சேதுபதிக்கு முதல்ல நன்றி சொல்லணும். இல்லன்னா இவரு வெளியே வந்துருக்க மாட்டாரு. எடிட்டர் கோவிந்தனுக்கும் ரொம்ப நன்றி சொல்லணும். அந்தப் படத்தை எடிட் பண்றது எவ்வளவு சிரமம்னு எனக்குத் தான் தெரியும்.

ஏன்னா இந்தப் படத்துல பைட் வேணுமா பைட் கிடையாது. சாங் வேணுமா சாங் கிடையாது. லவ்வு வேணுமா லவ்வு கிடையாது. ஆனா படம் நல்லாருக்கும். பெரிய ஜெனரேஷனுக்கு அவங்களோட காதலை அழகுபடுத்திக்கறதுக்கான ஒரு தீமைக் கொடுத்துட்டீங்க.

இந்தப் படம் இவ்வளவு அழகா வரணும்னா அதை 2டி ல கொடுத்தாத்தான் அழகா வரும்னு எனக்கு நம்பிக்கை இருந்துச்சு. ஏன்னா இதை கமர்ஷியலா யோசிக்கக்கூடாது. பெரிய கமர்ஷியல் படம் தான். ஆனா இது எல்லாருக்கும் புரியுமான்னு தெரியாது. அப்போ சிங்கத்துக்கிட்ட கொடுத்துட்டா பிரச்சனை வராது. ராஜா இருக்காரு. ராஜா அண்ணேன் இருக்காரு. கார்த்திக் அண்ணே இருக்காரு.

அவங்க டீம் இருக்கு. அந்தப் பிரச்சனையே வராம பார்த்துக்குவாங்க. அந்தப் படம் முழுமையா சென்று சேரணும். அதுக்கு அவ்ளோ டைம் கொடுத்து இது ரொம்ப ரேரான பிலிம். அது சரியா வரணும்னு அவ்வளவு மெனக்கிட்டு சப்போர்ட் பண்ணியிருக்காங்க. அந்த டீமுக்கு நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார். அவரது வாழ்க்கையில் நடந்த உண்மைச்சம்பவம் தான் அந்தப் படம். விஜய் சேதுபதியின் நடிப்பில் சூப்பர்ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பிரேம்குமார் தான் மெய்யழகன் படத்தின் இயக்குனர். 

Tags:    

Similar News