ரஜினி அந்த சீக்ரெட்டை என்னிடம் மட்டும் சொன்னார்!.. பீதி கிளப்பும் லோகேஷ் கனகராஜ்!...
Coolie: கமலை வைத்து விக்ரம், விஜயை வைத்து மாஸ்டர், லியோ ஆகிய படங்களை இயக்கிவிட்டு இப்போது ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கி முடித்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். வருகிற ஆகஸ்டு 14ம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் மற்ற பணிகள் நடந்து வருகிறது. படத்தின் டப்பிங் பணி சமீபத்தில் முடிவடைந்தது.
தற்போது பின்னணி இசை தொடர்பான பணிகள் நடைபெற்று வருகிறது. லோகேஷும், ரஜினியும் முதன் முறையாக இணைந்திருப்பதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், உபேந்திரா, சத்தியராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
மேலும், அமீர்கான் ஒரு கேமியோ வேடத்தில் நடித்திருக்கிறார். பேன் இண்டியா படமாக பல மொழிகளிலும் வெளியிட்டு 1200 கோடி வசூலை அள்ள வேண்டும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் டார்கெட் வைத்திருக்கிறது. விரைவில் இப்படத்தின் ஆடியோ லான்ச்சும் நடைபெறவிருக்கிறது.
ஜெயிலர் 2 படத்தை முடித்துவிட்டு ரஜினி 6 மாதம் ஓய்வெடுக்கப்போவதாகவும், அந்த நேரத்தில் தனது சுயசரியதை அவர் புத்தகமாக எழுதப்போவதாகவும் செய்திகள் ஏற்கனவே வெளியானது. தேர்தல் நேரம் என்பதால் ரஜினி அரசியல் விவாதங்களிலிருந்து தள்ளியிருக்கவே இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்றும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய லோகேஷ் ‘கூலி படத்தின் கடைசி இரண்டு செட்யூலிலும் ரஜினி சார் தனது பயோகிராபியை எழுதி வந்தார். ஷூட்டிங்கில் நேரம் கிடைக்கும்போதெல்ல்லாம் அவர் எழுதிகொண்டே இருந்தார். அவரின் பல அனுபவங்களையும் என்னிடம் பகிர்ந்துகொண்டார். என்னை தவிர வேறு யாரிடமும் அவர் அதை பகிர்ந்துகொள்ளவில்லை. அது ரகசியம் மற்றும் என் இதயத்திற்கு நெருக்கமானதும் கூட’ என சொல்லியிருக்கிறார்.