சிறுத்தையும் சிங்கமும் ஒரே கூண்டுலயா...? கைதி 2 படத்துக்கு தேதி குறிச்ச லோகேஷ் கனகராஜ்...!

கைதி 2 திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

By :  ramya
Update: 2024-10-03 06:30 GMT

kaithi2

தமிழ் சினிமாவில் வெறும் 5 திரைப்படங்களை இயக்கி தற்போது மிகப் பிரபல இயக்குனர்கள் லிஸ்டில் இணைந்திருக்கின்றார் லோகேஷ் கனகராஜ். ஏனென்றால் இந்த ஐந்து திரைப்படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. தற்போது ரஜினிகாந்த் அவர்களை வைத்து கூலி என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார்.

மாநகரம் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான லோகேஷ் கனகராஜ் இரண்டாவதாக எடுத்த திரைப்படம் கைதி. கார்த்தி நடிப்பில் உருவான இந்த திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இதன் இரண்டாவது பாகம் எப்போது வரும் என்று தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். 2-வது பாகம் விரைவில் உருவாகும் என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.

தற்போது ரஜினிகாந்த் அவர்களை வைத்து கூலி என்ற திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில் அதை முடித்துவிட்டு கைதி 2 திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது. ஆனால் தற்போது இருக்கும் சூழலில் ரஜினிகாந்த் அவர்களின் உடல் நிலையை பொறுத்து அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பாரா? இல்லையா? என்பது தெரியவரும். இந்நிலையில் கைதி 2 திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்து வருடம் ஏப்ரல் 10ம் தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

இந்த திரைப்படத்தில் கார்த்திக் ஹீரோவாக நடிக்க மற்றொரு கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. அதாவது லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே கமலஹாசன் அவர்களை வைத்து இயக்கியிருந்த விக்ரம் திரைப்படத்தில் கடைசியில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் அசர வைத்திருப்பார் சூர்யா.

அந்த ரோலக்ஸ் கதாபாத்திரத்தை இந்த கைதி 2 திரைப்படத்தில் கொண்டுவர இருப்பதாகவும் தகவல் கசிந்திருக்கின்றது, இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், ஆனால் தற்போது இருக்கும் சூழலில் கூலி திரைப்படம் டேக் ஆப் ஆகுமா? என்பதுதான் சந்தேகம். ரஜினிக்கு தற்போது ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் மருத்துவர்கள் அவரை கட்டாயம் ஓய்வெடுக்க தான் வலியுறுத்துவார்கள்.

இப்படி இருக்கும் சூழலில் தொடர்ந்து கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தால் கலந்து கொள்ள முடியுமா என்பது தெரியவில்லை. ஒருவேளை கூலி திரைப்படத்தை தள்ளி வைத்துவிட்டு கைதி 2 திரைப்படத்தை எடுப்பதற்கும் வாய்ப்பு இருக்கின்றது என்று சினிமா வட்டாரங்களில் கூறி வருகிறார்கள்

Tags:    

Similar News