1000 கோடி எடுத்து வைங்கடா!.. லோகேஷ் லைன் அப்பில் இருக்கும் 5 படங்கள்!...

By :  MURUGAN
Published On 2025-06-11 12:55 IST   |   Updated On 2025-06-11 12:55:00 IST

Lokesh kangaraj: மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியவர் லோகேஷ் கனகராஜ். ஒரு இரவில் நடக்கும் கதைக்கு அசத்தலாக திரைக்கதை அமைத்திருந்தார். இந்த படத்தை பார்த்த பல இயக்குனர்களும் பாராட்டியிருந்தார்கள். இன்னும் சொல்லப்போனால் இந்த படத்தை பார்த்துவிட்டுதான் விஜய் லோகேஷின் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

கார்த்தியை வைத்து லோகேஷ் இயக்கிய கைதி படமும் ஒரு இரவில் நடக்கும் கதைதான். இந்த படத்தையும் மிகவும் சிறப்பாக இயக்கியிருந்தார். அதன்பின் மாஸ்டர், விக்ரம், லியோ படங்களை இயக்கினார். இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குனராக லோகேஷ் மாறியிருக்கிறார்.

இவரின் படங்கள் ரசிகர்களுக்கு ஒரு புது உணர்வை கொடுக்கிறது. யாரும் பார்த்திராத இருண்ட உலகமே லோகேஷ் கனகராஜின் கதைக்களமாக இருக்கிறது. இவரின் ஒரு படத்தில் வரும் கதாபாத்திரம் அடுத்த படத்திலும் வருவதை ரசிகர்கள் LCU என அழைக்கிறார்கள். ரசிகர்கள் விரும்புவதால் அவரும் அதை தொடர்ந்து செய்து வருகிறார்.


இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்து என்னென்ன படங்களை கையில் வைத்திறார் என பார்ப்போம். இப்போது ரஜினியை வைத்து கூலி படத்தை எடுத்து முடித்திருக்கிறார். பேன் இண்டியா படமாக உருவாகியுள்ள இந்த படம் வருகிற ஆகஸ்டு 14ம் தேதி வெளியாகவுள்ளது.

அடுத்து கார்த்தியை வைத்து கைதி 2 படத்தை துவங்கவிருக்கிறார். இந்த படம் இந்த வருட இறுதியில் வெளியாகவுள்ளது. கைதி 2-வுக்கு பின் அமீர்கானை வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதம் துவங்கவிருக்கிறது. அதன்பின் ஒரு தெலுங்கு நடிகருடன் கைகோர்க்கவிருக்கிறார். இதுபோக சூர்யாவை வைத்து ரோலக்ஸ் மற்றும் கமலை வைத்து விக்ரம் 2 என லைன் அப் இருக்கிறது.

இது இல்லாமல் மாஸ்டர் 2, லியோ 2 எடுக்கும் ஆசையும் லோகேஷுக்கு இருக்கிறது. ஆனால், விஜய் அரசியலுக்கு போய்விட்டதால் இது நடக்குமா என்பது தெரியவில்லை. ஒருவேளை அரசியல் கைகொடுக்கவில்லை எனில் விஜய் இந்த படங்களில் நடிக்க வாய்ப்பிருக்கிறது.

Tags:    

Similar News