5 ஹீரோக்களை வளைத்துப் போட்ட மமிதா பைஜூ!.. இவ்வளவு படங்களில் நடிக்கிறாரா?!....

By :  MURUGAN
Published On 2025-07-09 11:22 IST   |   Updated On 2025-07-09 11:32:00 IST

Mamitha Baiju: சில நடிகைகள் திடீரென பிரபலமாகிவிடுவார்கள். அதிலும் ஒரு படம் பிரபலப்படுத்திவிடும். அப்படி பிரேமம் என்கிற மலையாள திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பிரபலமானவர்தான் மமிதா பைஜூ. இளசுகளிடையே நிகழும் காதலை இப்படம் பேசியது. அதை சீரியஸாக சொல்லாமல் காமெடியாக சொன்னதால் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது.

பிரேமம் ஒரு மலையாள படமாக இருந்தாலும் தமிழ்நாட்டிலும் இப்படம் நன்றாக ஓடியது. குறிப்பாக சென்னை, கோவை போன்ற ஊர்களில் இப்படத்தை இளசுகள் ரசித்தார்கள். இந்த படம் மமிதா பைஜூவை பிரபலப்படுத்திவிட்டது. 2017ம் வருடம் முதலே இவர் சினிமாவில் நடித்து வருகிறார். இவர் நடித்த 16வது படம்தான் பிரேமம்.


இந்த படத்திற்கு பின் தமிழில் இவருக்கு தொடர் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தில் மமிதா பைஜூ முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இது தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து ஹிட் அடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என சொல்லப்படுகிறது.

அடுத்து லக்கி பாஸ்கர் பட இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள புதிய படத்திலும் மமிதா பைஜூ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதிக பட்ஜெட்டில் இப்படம் உருவாகவுள்ளது. மேலும், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலரும் இதில் நடிக்கவுள்ளனர்.


ஒருபக்கம், போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திலும் மமிதா பைஜு தனுஷுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். குபேரா படத்திற்கு பின் தனுஷ் நடிக்கும் படம் இது. மேலும், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகவுள்ள டியூட் (Dude) படத்திலும் மமிதா நடிக்கவுள்ளார். குட் பேட் அக்லி படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது.

அடுத்து ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கவுள்ள திரில்லர் படத்திலும் மமிதா பைஜூ நடிக்கவுள்ளார். இது ராட்சசன் படத்தின் இரண்டாம் பாகம் போல உருவாகவுள்ளது. இந்த படத்திற்கு இரண்டு வானம் என தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

Tags:    

Similar News