மணிரத்னமும் சரி, பாரதிராஜாவும் சரி... அவரை மிஸ் பண்ணினா இதுதான் கதி..!

By :  SANKARAN
Published On 2025-06-11 11:44 IST   |   Updated On 2025-06-11 11:44:00 IST

1983ல் பல்லவி அனு பல்லவி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்குள் நுழைந்தார் மணிரத்னம். தொடர்ந்து இதயகோவில், மௌனராகம், நாயகன், அஞ்சலி, தளபதி ஆகிய படங்கள் அவரது பெயரைச் சொன்னவை. அதன்பிறகு திருடா திருடா, அலைபாயுதே, இருவர், கன்னத்தில் முத்தமிட்டால், காற்று வெளியிடை என 18 படங்கள் இயக்கினார். ஆனால் அவை பழைய படங்கள் அளவுக்கு அழுத்தமான முத்திரையைப் பதிக்கவில்லை.

இத்தனைக்கும் பிரம்மாண்ட பொருள்செலவு, பிரம்மாண்டமான கூட்டணி. சமீபத்தில் கூட நாயகன் படத்தைத் தங்கம் என்றும், தக் லைஃப் படத்தைத் தகர டப்பா என்றும் விமர்சித்துள்ளனர். ராவணன், தக்லைஃப், இருவர் என பல படங்கள் பிரம்மாண்ட பொருள் செலவு, பிரம்மாண்ட கூட்டணி. ஆனாலும் முத்திரைப் பதிக்கவில்லை. மணிரத்னம் இளையராஜாவை மிஸ் பண்ணி இருக்கிறார். இருவருக்கும் இடையே உள்ள ஈகோ பிரச்சனை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.


இளையராஜா மக்களை திரையரங்கோடு கட்டிப் போடுவார். திரையரங்கிற்கு அழைத்து வருவார். அந்தக் காலத்தில் அக்னி நட்சத்திரத்தில் ராஜா ராஜாதி ராஜனில்லே பாடல் அவ்ளோ சூப்பராக இருக்கும். அப்படி இருந்த ஒரு லெஜண்டை இன்னைக்கு தவற விட்டுட்டு பிரம்மாண்டமான கூட்டணிகள், கோடிக்கணக்கான சம்பளங்கள், பிரம்மாண்டமான புரொமோஷன்கள் என எதுவுமே நிலைப்பதில்லை.


தகரடப்பான்னு தான் பேரு வருது. மணிரத்னம் மட்டுமல்ல. எல்லாருமே அவரைத் தவற விடுறோம்.  தக் லைஃப் படத்தில் கமல், சிம்பு, ஏ.ஆர்.ரகுமான், ஜோஜூ ஜார்ஜ் என பெரிய நடிகர்கள், ஒளிப்பதிவு ரவி.கே.சந்திரன் மாதிரியான பெரிய டெக்னீஷியன்கள், பெரிய டைரக்டர் மணிரத்னம், பெரிய பட்ஜெட், பிரம்மாண்டமான புரொமோஷன் என எல்லாமே இருந்தும் படம் கடைசியில் தகர டப்பாவாகி விட்டதே.

பாடல்கள் எல்லாமே சூப்பராக இருந்தும் படத்தில் ஒரு சில மட்டும்தான் அதுவும் அரைகுறையாகத்தானே இருந்தது. அப்படி என்றால் இளையராஜா மிஸ் பண்ணியது உண்மைதானே என்றே எண்ண வேண்டியுள்ளது. 

அதே போலத்தான் பாரதிராஜாவும், இளையராஜாவும் இணைந்த படங்கள் எல்லாமே சூப்பர்ஹிட் ஆனது. இளையராஜா இல்லாமல் அவர் இயக்கிய படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இளையராஜாவின் இசையில் மட்டும் பாரதிராஜா அவரது மகனை அறிமுகப்படுத்தி இருந்தால் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. 

Tags:    

Similar News