புஷ்பா 2 எல்லாம் ஓரமாப்போ!.. வேர்ல்ட் கிங் நம்ம 'முஃபாசா' செஞ்ச சாதனையை பாருங்கய்யா!..

By :  Ramya
Update: 2025-01-05 13:46 GMT

mufasa

முபாசா: கடந்த 2019 ஆம் ஆண்டு தி லயன் கிங் என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. உலகம் முழுவதும் வசூல் சாதனை நிகழ்த்தி இருந்த இந்த திரைப்படத்தை தி ஜங்கிள் புக் என்ற திரைப்படத்தை இயக்கிய பேரி ஜென்கின்ஸ் என்பவர் இயக்கியிருந்தார். காட்டுக்கே ராஜாவாக இருக்கும் சிங்கத்தை மையமாக வைத்து இதுவரையில் இரண்டு திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றது.

ஒன்று 1994 ஆம் ஆண்டு வெளியானது, மற்றொன்று 2019 ஆம் ஆண்டு வெளியானது. இந்த லயன் கிங் படத்திற்கு ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது. அதாவது காட்டு விலங்குகளுக்கு இடையே நடக்கும் பொறாமை, சூழ்ச்சி, போராட்டம், காதல், தலைமைக்கு போட்டி என அனைத்தையும் காட்டி இப்படத்தை இயக்கியிருக்கின்றார் இயக்குனர்.


இப்படத்தின் இரண்டாவது பாகமான முபாசா தி லயன் கிங் என்ற திரைப்படம் கடந்த டிசம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு ஒவ்வொரு மொழிகளிலும் மிகப்பெரிய நடிகர்கள் டப்பிங் பேசி இருந்தார்கள். அதிலும் முபாசா கதாபாத்திரத்திற்கு தமிழில் அர்ஜுன் தாஸ் டப்பிங் பேசியிருந்தார்.

மேலும் அசோக் செல்வன், நாசர், விடிவி கணேஷ், சிங்கம்புலி, ரோபோ சங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் தமிழில் காட்டு விலங்குகளுக்கு குரல் கொடுத்திருந்தார்கள். தமிழை தாண்டி ஹிந்தியில் நடிகர் ஷாருக்கானும், தெலுங்கில் மகேஷ் பாபுவும் குரல் கொடுத்திருந்தார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க சூழ்ச்சியால் கொலை செய்யப்படும் சிம்பாவின் தந்தை முபாசா தான் கடந்து வந்த பாதையை வைத்து படம் உருவாகியுள்ளது.

அரசு குடும்பத்தை சேராமல் அனாதையாக வளரும் முபாசா தனக்கான ஆட்சியை உருவாக்கும் கதைதான் இந்த திரைப்படம். இப்படம் ஆரம்பத்தில் அந்த அளவுக்கு வசூல் செய்யவில்லை என்றாலும் கிறிஸ்மஸ் மற்றும் நியூ இயர் பண்டிகைகளில் பட்டையை கிளப்ப தொடங்கியது. இப்படம் உலக அளவில் 3,200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.


இந்தியாவில் மட்டும் படம் வெளியான 16 நாட்களில் சுமார் 150 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இந்த திரைப்படம் தமிழ் டப்பிங்கில் 23 கோடியும், தெலுங்கு டப்பிங்கில் 16 கோடி ரூபாயும், ஹிந்தி டப்பிங்கில் 46 கோடி ரூபாயும் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தற்போது உலக அளவில் சக்க போடு போட்டு வரும் திரைப்படம் புஷ்பா 2.

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான இந்த திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது. இப்படம் உலக அளவில் தற்போது வரை 1800 கோடி ரூபாய் வசூலை நெருங்கி வரும் நிலையில், அதனை முறியடித்து உலகம் முழுவதும் முபாசா திரைப்படம் 3200 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகின்றது. பாக்ஸ் ஆபிஸில் தி லயன் கிங் திரைப்படம் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.

Tags:    

Similar News