மீண்டும் அதே தப்பு… விக்னேஷ் சிவனுக்காக கோலிவுட்டில் ரவுடிசம் செய்யும் நயன்…

கட்ட பஞ்சாயத்து செய்யும் நயன்தாரா

By :  Akhilan
Update: 2024-12-30 06:00 GMT

Nayan-Vignesh shivan: இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இதுவரை கோலிவுட்டின் திரை தம்பதிகள் தராத பெரிய டார்ச்சரை தயாரிப்பாளர்களுக்கு கொடுத்து வருவது தமிழ் திரைத்துறை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது வழக்கம்தான். ஆனால் அவர்கள் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை எந்த விதத்திலும் தங்களுடைய சினிமாவிற்குள் எடுத்து வருவது இல்லை. பலர் வாய்ப்பு கேட்க கூட தயங்குவதை தான் இதுவரை பார்த்திருக்கிறது. கோலிவுட்.

ஆனால் இதையெல்லாம் தாண்டி கவலையே இல்லாமல் தயாரிப்பாளர்களை இம்சை கொடுத்து வருகின்றனர் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா. ஏற்கனவே நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடிகர் தனுஷிற்கு கொடுத்த பட்ஜெட்டை விட மிகப்பெரிய செலவை இழுத்து வைத்தார் விக்னேஷ் சிவன்.

இதனால் படம் சூப்பர் ஹிட் என்றாலும் தனுஷிற்கு மிகப்பெரிய அளவில் வசூல் கிடைக்கவில்லை. இந்த கோவத்தை அவர் திருமண டாகுமெண்டரிக்காக என்ஓசி கேட்டபோது மறுப்பு தெரிவித்திருந்தார். அதற்கும் நயன்தாரா அடாவடியாக இன்ஸ்டாகிராமில் கடிதம் ஒன்றை வெளியிட்டு பிரச்சினை செய்திருந்தார்.

அது ஓய்ந்திருக்கும் நிலையில், தற்போது இன்னொரு பிரச்சினை விடுத்து இருக்கிறது. பிரதீப் ரங்க நாதனை வைத்து விக்னேஷ் சிவன் தற்போது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதே நிறுவனம்தான், நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் தயாராகி வரும் படத்தையும் தயாரித்து வருகிறது. கணவன் மற்றும் மனைவி இருவர் படங்களையும் வைத்து பெரிய அளவில் லாபம் பார்க்க நினைத்தது இந்த நிறுவனம். ஆனால் இதில் தான் தற்போது தலைவலி தொடங்கி இருக்கிறது.

எல்ஐகே படத்திற்கு கொடுத்த பட்ஜெட்டை விட மிகப்பெரிய அளவு செலவை இழுத்து வைத்திருக்கிறார் விக்னேஷ் சிவன். இதனால் சூட்டிங் நிறுத்தப்பட பிரதீப் ரங்கநாதன் தன்னுடைய அடுத்த திரைப்படத்தின் வேலைகளுக்கு சென்று விட்டார். விக்னேஷ் சிவன் இதனால் வருத்தத்தில் வீட்டில் முடங்கினாராம்.

இந்த நேரத்தில் செவன் ஸ்கிரீன் நிறுவனம் நயன்தாராவிடம் கால்ஷீட் கேட்டு வந்திருக்கின்றனர். அவரோ பணமே இல்லைன்னு சொல்லிட்டீங்க அப்புறம் என்ன கால்ஷீட். முதல்ல பணத்தை ரெடி பண்ணி அந்த படத்தை முடிங்க. அப்புறம் இந்த படத்துக்கு கால்ஷீட் தரேன் என அடாவடியாக பேசியிருக்கிறார்.

இருந்தும், நிறுவனம் தங்கள் தரப்பில் இருந்த பிரச்சினையை கூறி, நீங்களும் தயாரிப்பாளர் தானே உங்கள் படத்திற்கான முதலீட்டை நீங்களே தயார் செய்து கொள்ளுங்கள் என கைவிரித்து விட்டதாம். கணவரின் பெயரை காப்பாற்ற தற்போது நயன் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக இணையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த படத்தை முடித்துக் கொடுத்தால் தான் தன்னுடைய அடுத்த படத்தை நடிக்க கால்ஷீட் தருவேன் எனவும் நயன் பிடிவாதமாக இருக்கிறார் எனவும் கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கள் தொடங்கி இருக்கிறது.

Tags:    

Similar News