லேடி சூப்பர்ஸ்டார் பட்டம் வேண்டாமென கெஞ்சினேன்… மண்ட மேல இருந்த கொண்டையை மறந்த நயன்…
நயன்தாராவின் பேட்டி சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Nayanthara: நடிகை நயன்தாரா சமீபத்தில் கொடுத்திருக்கும் பேட்டி வைரலாகி இருக்கும் நிலையில் தற்போது தனுஷ் ரசிகர்களிடம் மீண்டும் வகையாக சிக்கி இருக்கிறார்.
நடிகை நயன்தாரா தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்த வரை எந்த பிரச்னையும் இல்லை. அவர் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் திருமணம் செய்து கொண்ட பின்னர் சமூக வலைத்தள பக்கம் வந்தார். தன்னுடைய படத்துக்கு புரோமோஷன் செய்தே பெத்த தொகையை வசூலித்தார்.
தொடர்ந்து நிறைய பிசினஸ் செய்தும் கல்லா கட்டி கொண்டு இருந்தார். விக்னேஷ் சிவனுடனான திருமணத்தையுமே நெட்பிளிக்ஸில் விற்பனை செய்து மிகப்பெரிய கோடியை அள்ளினார். இதுவே ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் விமர்சனத்துக்கு உள்ளானது.
அதிலும், ரிலீஸுக்கு இரண்டு ஆண்டுகள் தள்ளிப்போனது. ஒருக்கட்டத்தில் நயனின் பிறந்தநாளில் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியானது. இரண்டு நாட்களுக்கு முன்னர் தனுஷை எதிர்த்து ஒரு அறிக்கையை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார்.
வன்மத்தை கொட்டி அவர் எழுதிய கடிதத்தை தனுஷ் ரசிகர்கள் மோசமாக விமர்சித்தனர். இந்த பிரச்னை சமீபத்தில் ஓய்ந்த நிலையில், தற்போது மீண்டும் பேட்டி கொடுத்து வகையாக மாட்டிக்கொண்டு இருக்கிறார். அந்த பேட்டியில் நயன் பல விஷயங்களை பேசி இருக்கிறார்.
அதிலும் முக்கியமான விஷயமாக தன்னுடைய லேடி சூப்பர்ஸ்டார் பட்டம் குறித்து சொல்லி இருந்தார். அந்த பட்டம் வேற பிரச்னை. என்னுடைய தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரிடம் தொடர்ச்சியாக எனக்கு அந்த பட்டம் வேண்டாம் என்று.கெஞ்சிக்கொண்டு இருந்தேன்.
நானாக யாரிடமும் சென்று பட்டம் வேண்டும் எனக் கேட்கவில்லை. அதற்காக நான் ஆசைப்படவும் இல்லை. இந்த சின்ன உலகில் ரசிகர்களை நான் ஏமாற்ற முடியாது. வெற்றிகரமான பெண்ணை பார்க்கும்போது யாருக்கு என்னை பிரச்னை என்பது எனக்கு புரியவில்லை எனவும் பேசி இருக்கிறார்.
இந்த வீடியோவை டேக் செய்த ரசிகர்கள், நயன்தாரா நடிப்பில் நெற்றிக்கண் திரைப்படம் அவருடைய தயாரிப்புதானே. அதில் போடாமல் இருந்து இருக்கலாமே எனக் கேள்வி எழுந்துள்ளது. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அஜித் மாதிரி அறிக்கையில் முடித்துவிடலாமே எனக் கலாய்த்து வருகின்றனர்.