மீண்டும் ஒரு விவாகரத்து… இந்த முறையும் தமிழ் பிரபலம்தானா? அதிர்ச்சியான ரசிகர்கள்…
டிசம்பரில் வெளியான பிரபலத்தின் விவாகரத்து அறிவிப்பு
Kollywood divorce: தமிழ் சினிமாவில் 2024 ஆம் ஆண்டு தொடர்ச்சியாக விவாகரத்து அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்து வருகிறது. வருட முடியும் இந்த மாதத்தில் கூட விவாகரத்து அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது.
தமிழ் சினிமா பிரபலங்கள் திருமணம் செய்து கொள்வதை விட அவர்களுடைய விவாகரத்து ரசிகர்களை மிகப்பெரிய அளவில் பாதித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து தொடர்ச்சியாக பல முன்னணி பிரபலங்கள் தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர்.
பிரபல நடிகர் தனுஷ் இரண்டு வருடங்களாக தன் மனைவியை பிரிந்து இருந்து விட்டு இந்த ஆண்டு நீதிமன்றத்தில் வழக்காக விவாகரத்தை பதிவு செய்தார். மேற்கொண்டு நடந்த விசாரணையில் இருவருக்கும் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து நடந்து முடிந்திருக்கிறது.
இதைத்தொடர்ந்து அதிர்ச்சி அளிக்கும் வகையில், நடிகர் ஜெயம் ரவி, இசைப்புயல் ஏ ஆர் ரகுமான், ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி, பிரபல இயக்குனர் சீனு ராமசாமி உள்பட பல பிரபலங்கள் தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர். இதனால் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சி அடைந்தனர் என்பதுதான் உண்மை.
போதும் போதும் என்ற அளவுக்கு விவாகரத்து அறிவிப்புகள் வந்து விட்ட நிலையில் ஆண்டு முடியும் கடைசி மாதம் ஆன டிசம்பரிலும் விவாகரத்து அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோலிவுட்டில் பிரபல நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணனும், நடிகருமான மணிகண்டன் தன்னுடைய மனைவி சோபியாவை பிரிந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த சோபியா தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார்.
சீரியல் நடிகராக வலம் வந்த மணிகண்டன் பிக் பாஸ் தமிழ் சீசன் 6ல் கலந்து கொண்டு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருந்தார். இருந்தும் அவருக்கு பெரிய அளவில் வெளியில் எந்த வாய்ப்புகளும் வராமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இருவரும் இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படாமல் இருக்கும் நிலையில் பரவி வரும் இந்த வதந்திக்கு தற்போது வரை இரு தரப்பும் எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.