உதவியாளர் தொட்டா கோவிட்… நடிகர்களுக்கு கட்டிப்பிடி வைத்தியம், முத்தம்… நித்யா மேனனின் லாஜிக்
Nithya Menon: நடிகை நித்யா மேனன் சமீபத்தில் நடந்த காதலிக்க நேரமில்லை ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடந்து கொண்ட விதம் தற்போது ரசிகர்களிடம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
நித்யா மேனனின் அறிமுகம்: கன்னடம் மற்றும் மலையாள சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானாலும் தமிழில் நடிகையாக தான் நித்யா மேனன் நடிக்க தொடங்கினார். வெப்பம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.
தொடர்ச்சியாக அவருக்கு தமிழிலும் வாய்ப்புகள் புதிய தொடங்கியது. சுருட்டை முடி, பப்பிலியான உருவம் என அப்போதே ரசிகர்களிடம் தனக்கான இடத்தை பிடித்து விட்டார். தொடர்ச்சியாக அவர் தேர்வு செய்யும் கதைகளும் வித்தியாசமாக அமைய முக்கிய நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நித்யாமேனன்.
இதைத்தொடர்ந்து, தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் ஷோபனா கேரக்டரில் நடித்திருந்தார். ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் அடித்த இந்த திரைப்படத்திற்காக நித்யா மேனன் 70 வது தேசிய விருதில் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார்.
உதவியாளருக்கு அவமரியாதை: தற்போது கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதற்கான படப்பிடிப்புகள் முடிந்து விட்ட நிலையில் படத்தினை வரும் ஜனவரி 14ஆம் தேதி வெளியிடப்பட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
இதற்கான, இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்து முடிந்திருக்கிறது. இந்நிகழ்ச்சியில் நித்யா மேனனும் கலந்து கொண்டார். தொடக்கத்தில், மிஷ்கினை பார்த்து நித்யாமேனன் என்னை கிள்ளவோ, நசுக்கவோ கூடாது. நான் ரெடியா இருக்கேன் எனக் கூறி அவருக்கு கன்னத்தில் முத்தம் கொடுப்பார்.
மிஷ்கினும் அவருக்கு கையில் முத்தம் கொடுத்து செல்வார். தொடர்ச்சியாக, நடிகர் ஜெயம் ரவி மற்றும் வினயை கட்டியணைத்து அவர்களுக்கும் வாழ்த்து சொல்லிவிட்டு நகர்வார் நித்யா மேனன். ஆனால் அவர் பேச வரும்போது அவருக்கு மைக்கை சரி செய்ய வந்த உதவியாளரை தள்ளி நிற்குமாறு கூறுகிறார்.
அவர் தயங்க ஏற்கனவே எனக்கு உடம்பு சரியில்ல உங்களுக்கும் கோவிட் வந்துடாம என கூறிவிட்டு தன்னுடைய பேச்சை தொடங்குகிறார். நடிகர்களிடம் சாதாரணமாக பழகும் போது வராத பிரச்சனை உதவியாளர் அருகில் வரும்போது மட்டும் எப்படி வந்தது என நித்யா மேனனை தற்போது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.