தற்காலிகமாக படம் தள்ளிவைப்பு! கேப்டன் மகனுக்கு இப்படியொரு நிலைமையா?
padaithalaivan
படைத்தலைவன் படத்தின் ரிலீஸ் தேதியை தற்காலிகமாக தள்ளி வைப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் திரைப்படம்தான் படைத்தலைவன். இந்தப் படத்தை அறிவு என்பவர் இயக்கியிருக்கிறார். படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். சமீபத்தில்தான் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
அந்த விழாவிற்கு பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ், விஜயபிரபாகரன் போன்றோர் கலந்து கொண்டனர். அதோடு திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு சண்முகப்பாண்டியனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்தப் படத்தை பற்றி சண்முகப்பாண்டியன் கூறும் போது இந்தப் படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம் என்றும் அப்பா இருக்கும் போதே இந்தப் படத்தின் கதையை கேட்டார் என்றும் கூறினார்.
படத்தின் போஸ்டர் வெளியானதுமே அனைவரும் இதை கும்கி படத்துடன் ஒப்பிட்டு பேசினார்கள். ஆனால் அது கிடையாது. கும்கி படம் மட்டுமில்லாமல் வேறு எந்த படத்துடனும் இந்தப் படத்தை ஒப்பிடவே முடியாது என்றும் சண்முகப்பாண்டியன் கூறினார், இதே மேடையில் ஏஆர் முருகதாஸ் பேசும் போது சண்முகபாண்டியனை வைத்து ரமணா 2 படம் கூட எடுக்கலாம். அதனால் வாங்க என கூறினார் முருகதாஸ்.
இந்தப் படம் நாளை ரிலீஸாக இருந்த நிலையில் திடீரென படத்தின் ரிலீஸ் தேதியை
தள்ளி வைத்திருக்கின்றனர். அதற்கு காரணம் ‘படத்திற்கு சரியான திரையரங்குகள் ஒதுக்கப்படாததால் ஒதுக்கீட்டு சிக்கல்களின் காரணமாக பட வெளியீடு தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. புதிய வெளியீட்டு தேதியை விரைவில் உறுதி செய்து அறிவிக்க உள்ளோம்’
padaithalaivan
‘இந்த இடையூறுக்கு மன்னிக்கவும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி ’ என சண்முகப்பாண்டியன் தன்னுடைய வலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.