படம் பார்த்து அழுதுட்டேன்!.. டிராகனை பாராட்டிய ஷங்கர்!. பிரதீப் கொடுத்த ரியாக்ஷன்!....
Dragon Movie: தமிழ் சினிமாவில் ஒரு டிரெண்ட் செட்டராக இருந்தவர் ஷங்கர். ஊழல், லஞ்சம், கருப்பு பணம், கல்வி, அரசியல், தனி மனித ஒழுக்கும் என எல்லாவற்றையும் தனது படங்களில் பேசியவர். அதோடு, எந்திரன், 2.0 படங்கள் மூலம் சயின்ஸ் பிக்சன் படங்களையும் தமிழ் ரசிகர்களுக்கு காட்டினார்.
ராஜமவுலிக்கே இன்ஸ்பிரேஷன்: ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ், இந்தியன், அந்நியன், ஐ, சிவாஜி, எந்திரன், 2.0 என அதிக பட்ஜெட் படங்களை இயக்கியவர். பாகுபலி எடுத்த ராஜமவுலியே தனக்கு ஷங்கர்தான் இன்ஸ்பிரேஷன் என பேசியிருந்தார். பாலிவுட்டிலும் ஷங்கருக்கு மதிப்பு இருக்கிறது. அவரின் இயக்கத்தில் நடிக்க பாலிவுட்டின் முன்னணி நடிகர்களே ஆசைப்படுகிறார்கள்.
தொடர் தோல்வி: ஆனால், இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் போன்ற படங்கள் ஷங்கருக்கு வெற்றிப்படங்களாக அமையவில்லை. எனவே, ஷங்கர் டிரெண்டிங்கில் இல்லை. ஒரே மாதிரி படம் எடுத்தால் இப்படித்தான் நடக்கும் என ரசிகர்களே பேச துவங்கிவிட்டார்கள். ஷங்கருக்கு இது போதாத காலம். ஷங்கர் தன்னை அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் பேசினார்கள்.
டிராகன் பாராட்டு: இந்நிலையில்தான் டிரகன் படம் பார்து பாராட்டியிருக்கிறார் ஷங்கர். டிரான ஒரு அழகான படம். அஸ்வத் மாரிமுத்து சிறப்பாக எழுதி இயக்கியுள்ளார். எல்லா கதாபாத்திரங்களுக்கும் அழகான மற்றும் முழுமையான பயணம் இருக்கிறது. தான் ஒரு டெரிபிக் எண்டர்டெய்னர் என்பதை பிரதீப் மீண்டும் நிரூபித்திருக்கிறார். ஆத்மார்த்தமான நடிப்பு.. மிஷ்கின் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோரின் நடிப்பும் சிறப்பாக இருக்கிறது. மனதில் நீடித்து நிற்கும் நடிப்பை ஜார்ஜ் மரியன் கொடுத்திருக்கிறார். படத்தில் எல்லா கதாபாத்திரங்களும் சிறப்பாக இருக்கிறது. கடைசி இருபது நிமிடம் என்னை அழவைத்துவிட்டது. ஏமாற்றக்கூடியர்கள் அதிகரித்து வரும் இந்த உலகில் இது போன்ற கருத்துக்கள் தேவையான ஒன்று’ என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
உருகிய பிரதீப்: இதற்கு நன்றி சொல்லியுள்ள பிரதீப் ‘சார்.. உங்கள் படத்தை பார்த்த வளர்ந்த எனக்கு உங்களிடமிருந்து இப்படி ஒரு வாழ்த்து வருமென்று கனவில் கூட நினைக்கவில்லை. நீங்கள்தான் எனக்கு பிடித்த இயக்குனர். நீங்கள் என்னை பற்றி பேசுவது நம்ப முடியாத கனவு போல இருக்கிறது. என்னுடைய உணர்வுகளை வார்த்தைகளில் விளக்க முடியவில்லை. மிகவும் நன்றி சார்.. உங்களை நேசிக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.