எனக்கு ஒரு கதை பண்ணுங்க!.. தலீவரின் சாணக்ய தந்திரம்!.. கலாய்க்கும் புளுசட்ட மாறன்!...

By :  Murugan
Update:2025-02-24 11:52 IST

Rajinikanth: நடிகர் ரஜினி முன்பெல்லாம் தனக்கு பிடித்த, அதேநேரம் தொடர் ஹிட் படங்களை கொடுக்கும் சீனியர் இயக்குனர்களின் இயக்கத்தில் மட்டுமே தொடரந்து நடித்து வந்தார். எஸ்.பி.முத்துராமன். பி.வாசு, சுரேஷ் கிருஷ்ணா, கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர் ஆகியோரை இதற்கு உதாரணமாக சொல்ல முடியும்.

அதில் சில படங்கள் சறுக்கியதால் இளம் இயக்குனர்களின் பக்கம் அவரின் பார்வை திரும்பிது. அதுவும், யாரையும் அறிமுகமெல்லாம் செய்ய மாட்டார். ஹிட் கொடுத்த இயக்குனரை அழைத்து பாராட்டி தனக்கும் ஒரு கதையை ரெடி பண்ணுங்க என்பார். இதை நம்பி அந்த இளம் இயக்குனர் மாதக்கணக்கில் காத்திருந்தால் அவரை டீலில் விட்டுவிட்டு வேறு இளம் இயக்குனர் பக்கம் போய்விடுவார். இதில் தப்பியது நெல்சனும், லோகேஷ் கனகாஜும் மட்டுமே. லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பதாக பேசப்பட்டு அது நடக்கவில்லை. தன்னுடைய போட்டி நடிகரான கமலுக்கு விக்ரம் எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த பின்னரேலோகேஷின் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கவே ஒப்புக்கொண்டார். அதுதான் ரஜினியின் கணக்கு.


தன்னுடைய பேட்டை படத்தை விட விஸ்வாசம் படம் அதிக வசூலை பெற்றதால் அந்த பட இயக்குனர் சிறுத்தை சிவாவை அழைத்து அவரின் இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் ஓடவில்லை என்பதால் அவரை கழட்டிவிட்டார். ஜெயிலர் ஹிட் அடித்ததால்தான் நெல்சனின் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில், பிரபல யூடியூப்பர் புளூசட்டமாறன் தனது எக்ஸ் தளத்தில் ரஜினியை கலாய்த்துள்ளார். குதிரையை வெற்றி பெற வைப்பதை விட வெற்றி பெற்ற இளம் குதிரை மீது சவாரி செய்வதுதான் தலீவரின் புது பாலிசி. எனவே, அறிமுக இயக்குனர்களை கண்டுகொள்ள மாட்டார். புதிதாக வெளியாகும் ஹிட் படங்களை பார்த்துவிட்டு அந்த இளம் இயக்குனர்களை வீட்டிற்கு அழைத்து பாராட்டுவார். அந்த படங்களில் மக்கள் ரசித்த வில்லன் அல்லது கேரக்டர் ரோலை எனக்கு தந்திருந்தால் நான் நடித்திருப்பேனே என சொல்லுவார்.


உதாரணம்: ஜூகர்தண்டா பாபி சிம்மா கேரக்டர். ஆனால் சொல்வதோடு சரி.. ஹீரோவாக மட்டுமே நடிப்பார். அதோடு ‘எனக்கு ஒரு கதை ரெடி பண்ணுங்க’ என்பார். இதை நம்பி பல இளம் இயக்குனர்கள் மாதக்கணக்கில் யோசித்து வேலை செய்வார்கள். அவரிடம் போய் சொன்னால் ‘இன்னும் டெவலப் பண்ணிட்டு வாங்க’ என அனுப்பி வைப்பார். சில பல மாதங்கள் கழித்து அவர்கள் மீண்டும் வருவார்கள்.

அதற்குள் வேறு சில படங்கள் ஹிட்டாகி டிரெண்ட் மாறியிருக்கும். எனவே, அவர்களை கழட்டி விட்டு, புதிதாக ஹிட் கொடுத்த இயக்குனர்களை அழைத்து பாராட்டி அவர்களிடம் ‘எனக்கு ஒரு கதை பண்ணுங்க’ என்பார். டான் பட இயக்குனர் சிபி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் தேசிங்கு பெரியசாமி, மாரி செல்வராஜ், பிரதீப் ரங்கநாதன் என இந்த பட்டியல் நீளும். இப்போது டிராகன் படம் நன்றாக ஓடுவதால் அந்த இயக்குனரை அழைத்து பாராட்டுவார். மிஷ்கின் நடிச்ச கேரக்டரை என்னிடம் சொல்லி இருந்தா .‌நான் நடிச்சிருப்பனே என்பார். அவரிடமும் ‘எனக்கு ஒரு கதை ரெடி பண்ணுங்க’ என்பார். ரிப்பீட்டு!!.. என கலாய்த்திருக்கிறார்.

Tags:    

Similar News