உண்மையான புஷ்பா நம்ம கேப்டன்தான்!.. பிரேமலதா சொல்றத கேளுங்க!..

By :  Murugan
Update: 2025-01-06 12:23 GMT

Vijayakanth: விஜயகாந்த் என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அவர் எல்லோருக்கும் உதவுபவர், நல்லவர், ஈர மனசுக்காரர், யாருக்கும் எந்த துரோகமும் செய்யாதவர், குறிப்பாக சுயநலம் இல்லாதவர் என்பதுதான். அவர் வாழ்ந்த காலத்தின் மூலம் மக்களுக்கும், ரசிகர்களுக்கும் அவர் விட்டு சென்றிருப்பது இதுதான்.

உதவி செய்வதில் அவர் பாகுபாடு பார்த்ததே இல்லை. சினிமா சாப்பாட்டில் இருந்த பாகுபாட்டை முதலில் உடைத்தவர் அவர்தான். ஷூட்டிங்கில் நடிகர், நடிகைகள், இயக்குனர் ஆகியோருக்கு ஒரு சாப்பாடு மற்ற தொழிலாளர்களுக்கு வேறு சாப்பாடு என இருந்தபோது அதை மாற்றி எல்லோருக்கும் ஒரே மாதிரியான உணவு கொடுக்க வேண்டும் என முதல் குரல் கொடுத்தவர் விஜயகாந்துதான்.

சொன்னதோடு மட்டுமில்லாமல் தான் தயாரிக்கும் படங்களில் அதை செய்தும் காட்டினார். மற்ற தயாரிப்பாளர்களையும் அதை செய்ய வைத்தார். தன்னால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவி செய்து கொண்டே இருந்தார். எவ்வளவே பேரின் கல்வி, திருமணம், ஆரோக்கியம் தொடர்பான பல பிரச்சனைகளுக்கு உதவி செய்திருக்கிறார்.


சினிமாவில் இவரால் வாழ்ந்தவர்கள் பலரும் இருக்கிறார்கள். பல புதிய நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை உருவாக்கியிருக்கிறார். இந்நிலையில்தான், உண்மையான புஷ்பா அல்லு அர்ஜூன் இல்லை. அது கேப்டன் விஜயகாந்துதான் என அவரின் மனைவி பிரேமலதா கூறியிருக்கிறார்.

அல்லு அர்ஜூன் நடிப்பில் புஷ்பா மற்றும் புஷ்பா 2 ஆகிய படங்கள் வெளியாகி ஹிட் அடித்தது. அதிலும், புஷ்பா 2 படம் 1800 கோடியை வசூல் செய்து சாதனை செய்திருக்கிறது. செம்மரக்கட்டை கடத்தும் கும்பல் பற்றிய கதை இது. இந்த தொழிலில் உள்ள போட்டிகள், கடத்தல் கும்பலை பிடிக்க நினைக்கும் போலீஸ் அதிகாரி, இதற்கு பின்னாள் உள்ள அரசியல் என பல விஷயங்கள் இந்த படத்தில் டீல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஒரு விழாவில் பேசிய பிரேமலதா ‘ திருவண்ணாமலையில் வேலை வாய்ப்பு இல்லாஅமல் பக்கத்து மாநிலத்திற்கு சென்று செம்மரக்கட்டையை வெட்டி நம் தமிழ் மக்கள் கஷ்டப்பட்ட போது உங்கள் வீட்டு பையனாக, நான் இருக்கிறேன் என சொல்லி பாதிக்கப்பட்ட அந்த குடும்பங்களுக்கு நேரடியாக சென்று நிதி உதவி வழங்கி அவர்களுடைய துயரிலே பங்கேற்று உண்மையாக தெய்வமாக வாழ்ந்தவர் நமது கேப்டன். இன்றைக்கு செம்மரக்கட்டை பற்றி புஷ்பா படம் எடுத்திருக்கிறார்கள். ஆனால், உண்மையான புஷ்பா நமது கேப்டன்தான்’ என பேசியிருக்கிறார்.

Tags:    

Similar News