சின்மயி பிரச்னையை சரி செய்ய நினைச்சேன் முடியல!.. அவரோட குரலுக்கு நான் ரசிகன் - பிரபல தயாரிப்பாளர்!

ஏ.ஆர். ரஹ்மான் தனது படங்களில் வைரமுத்து பாட்டு எழுதுவதற்கு தொடர்ந்து அனுமதிக்காமல், சின்மயிக்கு வாய்ப்பு வழங்கி வருகிறார்.;

By :  SARANYA
Published On 2025-05-31 20:06 IST   |   Updated On 2025-05-31 20:06:00 IST

தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் தக் லைஃப் சம்பவமாக சின்மயியை மேடை ஏற்றி தமிழில் முத்த மழை பாடலை பாட வைத்தது தான் சமூக வலைதளங்களில் கடந்த சில ஆண்டுகளாக பேசு பொருளாக மாறியுள்ளது.

தெலுங்கு மற்றும் இந்தி வெர்ஷனில் மட்டுமே படத்தில் சின்மயி பாடியிருக்கிறார். தமிழில் அவருக்கு பாடவும் டப்பிங் பேசவும் பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், ஹைதராபாத்தில் செட்டில் ஆன சின்மயி மற்ற மொழிகளில் தான் பணியாற்றி வருகிறார் என தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியுள்ளார்.

பாடகி சின்மயிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வைரமுத்து மீது அவர் வைத்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை கிளப்பியது. டப்பிங் யூனியன் தலைவரான ராதா ரவி மீதும் சின்மயி குற்றச்சாட்டை வைத்துள்ளார்.


ஏ.ஆர். ரஹ்மான் தனத் படங்களில் வைரமுத்து பாட்டு எழுதுவதற்கு தொடர்ந்து அனுமதிக்காமல், சின்மயிக்கு வாய்ப்பு வழங்கி வருகிறார். இரண்டு பெரிய புள்ளிகளை பிரச்னைக்கு தொடர்பானவர்களை நேருக்கு நேர் அமர வைத்து எப்படியாவது பேசி பஞ்சாய்த்தை தீர்த்து வைக்க வேண்டும் என தான் எவ்வளவோ முயன்றதாகவும் அது முடியவில்லை என தனஞ்செயன் கூறியுள்ளார்.

ஒரு தெய்வம் தந்த பூவே பாடலில் இருந்தே தான் சின்மயியின் மிகப்பெரிய ஃபேன் என்றும் அவருடைய மெஸ்மரிஸிங் குரல் தமிழ் சினிமாவுக்குத் தேவை என்றும் பல முன்னணி நடிகைகளுக்கு அவர் டப்பிங் கொடுத்தால் அந்த அளவுக்கு அற்புதமாக இருக்கும் என பாராட்டிப் பேசியுள்ளார். கூடிய சீக்கிரமே சின்மயி தமிழ் சினிமாவில் பாடல்கள் பாட வேண்டும் என ரசிகர்களும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

Tags:    

Similar News