275 கோடி கேட்குறீங்களே? உங்களால அதுக்கு உத்தரவாதம் தர முடியுமா? விஜயை பார்த்தா இப்படியொரு கேள்வி?
vijay
இன்றைக்கு தயாரிப்பாளர்கள் நடிகர்கள் சம்பளத்தை நிர்ணயிப்பது இல்லை. புதுமுகங்களுக்கு வேண்டுமானால் அவர்கள் நிர்ணயிக்க முடியும். ஆனால் இருக்கிற நடிகர்கள் அவர்கள் நினைப்பதை கேட்க்கிறார்கள். ஒரு படம் ஓடி விட்டால் அதிக சம்பளம் கேட்பவர்கள், தோல்வி அடைந்தால் குறைக்க முன் வருவார்களா? தோல்வி படத்துக்கு பிறகு நடிக்கும் படங்களின் வியாபாரம் நன்றாக இருக்காது.
இதுவும் தயாரிப்பாளர் தலையில்தான் விழும். லைகா நிறுவனம் இந்தியன்-2 படத்தின் மூலம் எவ்வளவு பெரிய நஷ்டத்தை சந்தித்தது. நான் கேட்கிறேன் தளபதி விஜய்க்கு 275 கோடி ரூபாய் சம்பளம் கொடுப்பதற்கு அவரிடம் என்ன இருக்கிறது. அவரது எல்லா படங்களுமே நிச்சயம் வெற்றி பெரும் என்று உறுதி அளிக்க முடியுமா? தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைத்து விடுமா? சரி விடுங்க. அவரது மொக்கை படங்கள் கூட ஓடியதாகவே வைத்துக் கொள்வோம்.
இப்போ அஜித் பக்கம் வருவோம். அவர் படம் தோல்வி அடைந்து விட்டால் முதலீடு செய்த தயாரிப்பாளருக்கு எவ்வளவு பெரிய நஷ்டம். 200 கோடி ரூபாய் சம்பளம் அஜித் வாங்குகிறார். அவருடைய விடாமுயற்சி படம் தோல்வி படம். தியேட்டர்களில் ஒரு வாரம் கூட ஓடவில்லை. இந்த படத்தின் மூலம் லைகா நிறுவனம் எவ்வளவு பெரிய பாதிப்பை சந்தித்தது தெரியுமா? அஜித்துக்கு 200 கோடி, படத் தயாரிப்பு ஒரு 200 கோடி. மொத்தம் 400 கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கும் படம் நூறு சதவீதம் வெற்றி பெறும் என்று அவரால் சொல்ல முடியுமா?
450 கோடி 500 கோடி எல்லாம் வேண்டாம் 405 கோடி ரூபாய் கண்டிப்பாக கிடைக்கும் என்று அஜித் உத்தரவாதம் தருவாரா? அப்படி இல்லாதபோது எந்த அடிப்படையில் 200 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறார். ரஜினி, கமல், தனுஷ் படங்கள் எல்லாம் வெற்றி பெறுகிறதா? அவர்களால் அதற்கு உததரவாதம் தர முடியுமா? பின்னர் எந்த அடிப்படையில் 300 கோடி ரூபாய் வரை கேட்டு உங்கள் வீட்டு பீரோவில் பணத்தை பூட்டி வைத்துக் கொள்கிறீர்கள். பெரிய நடிகர்களை ஏன் தேடிப்போக வேண்டும் என்று கேட்கிறார்கள்.
அன்று சின்ன நடிகர்களாக இருந்த ரஜினி, கமல், விஜய், அஜித் போன்றவர்கள் தான் இன்று பெரிய நடிகர்களாகி இருக்கிறார்கள். சூர்யா, சிம்பு, தனுஷ் போன்றவர்களும் சின்ன படத்தில் நடித்துதான் இன்றைக்கு பெரிய நடிகர்கள் ஆகி இருக்காங்க. இவர்கள் எல்லாம் வந்தவுடனே பெரிய நடிகர்கள் ஆகி விட்டார்களா? சூப்பர் ஸ்டார் ஆகி விட்டார்களா? மார்க்கெட் இருப்பவர்ளை வைத்துதான் படம் எடுப்பார்கள். அப்படி வரும் தயாரிப்பாளர்களிடம் 275 கோடி ரூபாய் சம்பளம் கேட்கும் நீங்கள், போட்ட பணம் திரும்ப கிடைக்கும் என்ற உத்தரவாதம் தர முடியுமா?
balaji prabhu
இன்றைக்கு தமிழ் தயாரிப்பாளர்களே இல்லை. தெலுங்கு, கன்னடத்தில் இருந்து வந்துதான் தமிழ் படம் எடுக்கிறார்கள். இவர்கள் எல்லாம் எங்கே போனார்கள். எல்லோரிடமும் பணத்தை வாங்கி கொண்டு தமிழ் தயாரிப்பாளர்களே இல்லாத நிலையை நடிகர்கள் உருவாக்கி விட்டார்கள். நிறைய பேர் இன்று உயிரோடு இல்லை.
ஒரு படத்துக்கு 275 கோடி சம்பளம் என்றால், அதையும் முழுவதுமாக ஒரே நேரத்தில் வட்டிக்கு வாங்கி கொடுத்து விட்டு அதற்கு வரியும் கட்டி விட்டு, மேலும் 150 கோடி ரூபாய் செலவழித்து படம் எடுத்தால் லாபம் வேண்டாம். போட்ட பணமாவது கிடைக்கும் என்ற உத்தரவாதம் இருக்கிறதா? இந்த சினிமா தொழில் யாரும் கணிக்க முடியாது. இன்றைக்கு சினிமாவில் 10000 கோடி முதலீடு செய்தால் பத்தே நாளில் காணாமல் போய்விடும்.
அதேநேரம் அந்த பணத்தை வைத்துக் கொண்டு நீங்கள் பத்தாயிரம் வருடம் சுகமாக வாழ முடியும். இதை நடிகர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். நடிகர்கள் சுயநலமாக இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொண்டால் இந்த தொழில் நிலைக்கும். இவ்வாறு பிரபல சினிமா தயாரிப்பாளர் பாலாஜி பிரபு ஒரு பேட்டியில் தெரிவித்து உள்ளார்.