ஜனநாயகன் படத்துல எச்.வினோத் செய்யப்போற தரமான சம்பவம்.... தயாரிப்பாளர் தகவல்
விஜய் தனது கடைசி படம் ஜனநாயகன் தான் என்று அறிவித்து விட்டார். இது அவரது 69வது படம். அதனால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது. இந்தப் படம் நிச்சயமாக விஜயின் அரசியலுக்கும் அச்சாரம் போடும் என்கிறார்கள். அரசியல் சார்ந்த பல பஞ்ச் டயலாக்குகள் இந்தப் படத்தில் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
படத்திற்கான படப்பிடிப்பு சமீபத்தில் கொடைக்கானலில் நடைபெற்றது. போகிற போக்கில் மதுரை விமானநிலையத்தில் ரசிகர்கள் பலத்த வரவேற்பு கொடுக்க அவர்களையும் சந்தித்தார் விஜய்.
சினிமா, அரசியல் என இருபாதைகளிலும் இப்போது கவனம் செலுத்தி வருகிறார். ஜனநாயகன் படப்பிடிப்பு முடிந்ததும் அரசியலில் முழுவீச்சில் இறங்கி விடுவார். அவரது சுற்றுப்பயணம் தமிழகம் முழுவதும் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
அந்த வகையில் ஜனநாயகன் படம் குறித்து தயாரிப்பாளர் தனஞ்செயன் தற்போது ஒரு தகவலைத் தெரிவித்துள்ளார். இதுவும் வழக்கம் போல ஹைப்பை எகிறச் செய்வதாகத்தான் உள்ளது. வாங்க என்ன சொல்றாருன்னு பார்க்கலாம்.
ஜனநாயகன் படத்துல போலீஸ் கெட்டப்ல ஒரு ஸ்டில் வந்து வைரலானது. விஜயைப் பார்த்ததும் தெறி மாதிரி தெறிக்க விடுவாருன்னு தெரியுது. எச்.வினோத் எப்படியும் ஒரு கமர்ஷியல் ஹிட் கொடுத்துடுவாரு. அதுல எந்த சந்தேகமும் இல்லை. சிறப்பான படமாகத்தான் பண்ணப் போறாரு. எல்லாருமே அதைத்தான் எதிர்பார்க்குறாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகன் வரும் 2026 பொங்கல் தினத்தையொட்டி ஜனவரி 9ல் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தலில் விஜய் குதிக்க உள்ளதால் இந்தப் படத்தில் பல காட்சிகள் பிரச்சாரத்திற்கு வழிவகுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் உடன் இணைந்து ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
வில்லனாக பாபி தியோல் நடித்துள்ளார். மேலும் கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ், நரேன், பிரியாமணி, ஸ்ருதிஹாசன், மமிதா பைஜூ மோனிசா பிளசி, வரலட்சுமி சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.