நாயகனைப் பார்த்த மாதிரி இருந்துச்சு... சிம்புவுக்கு பெரிய அதிர்ச்சி waiting..! தக் லைஃப் டிரெய்லர் சொல்வது என்ன?

By :  SANKARAN
Published On 2025-05-17 23:28 IST   |   Updated On 2025-05-18 11:28:00 IST

தக் லைஃப் டிரெய்லர் இன்று வெளியானது. இதையொட்டி பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் என்ன சொல்றாருன்னு பாருங்க.

டிரெய்லர் ரொம்ப பிரமாதமா இருந்தது. நாயகன் படத்தையே திரும்ப பார்த்த மாதிரி இருந்தது. நாயகன் கமலை ரீகிரியேட் பண்ணிருக்காங்க. கமல் எவ்வளவு வயசானாலும் அந்த லிப் கிஸ்ஸை விட மாட்டாரு போல. அவரு ரேஞ்சுக்கு ஒண்ணு பண்றாரு. சிம்புவுக்கும் டிரெய்லர்ல முக்கியத்துவம் கொடுத்துருக்காங்க. கமலுக்கு ஈக்குவலான போர்ஷனை டிரெய்லர்லயே வச்சிருக்காங்க.

கமல் எரா முடிஞ்சிப் போச்சுன்னு நினைக்கும்போது விக்ரமை திடீர்னு கொடுத்துட்டாங்க. திரும்பவும் ஒரு பெரிய படமா தக் லைஃப் வரப்போகுது. இந்தப் படத்து டிரெய்லர்ல ஒரு கதையைவே சொல்லிருக்காங்க. கமல் ஒரு கேங்ஸ்டரா பெரிய தாதாவான்னு தெரில. அவரு பொறுப்பை பையன்கிட்ட மாத்துறாரு. என்னவாகுதுங்கற சர்ப்ரைஸ அதுல வச்சிருக்காங்க. சிம்பு ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருக்கு.

இப்போதைக்கு அதை சொல்ல முடியாது. கற்றாரைக் கற்றாரே காமுறுவர்னு சொல்வாங்க. அந்த மாதிரி கமல் படங்களில் நாசர் கண்டிப்பா இருப்பாரு. அவருக்குப் பொருத்தமான கேரக்டரை வச்சிருப்பாங்க.

சிம்புவை ஒழுங்குபடுத்துனதுன்னா அதுல மணிரத்னத்துக்குப் பங்கு இருக்கு. அவரு சரியா படப்பிடிப்புக்கு வர மாட்டாருன்னு சொன்னாங்க. ஆனா அவரை இந்த இடத்துக்குக் கொண்டு வந்ததுல சிம்புவுக்கு மணிரத்னம் காட் ஃபாதரா இருக்காரு.


மணிரத்னம்கிட்ட இருக்குற கிளாரிட்டி மற்ற இயக்குனர்களிடம் இல்லை. அதனால் அவரது படங்களுக்கு மட்டும் சிறப்பாக ஒத்துழைக்கிறார். அதே நேரம் அவர் லேட்டா வந்தாலும் வேகமாகவும் டேக் வாங்காமலும் சிறப்பாக நடித்துக் கொடுத்து விடுகிறார். என்ன இருந்தாலும் கடமையைச் செய்ய சிவாஜி பார்முலாவைத் தான் கடைபிடிக்க வேண்டும்.

6 மணில இருந்து சாயங்காலம் 6 மணி வரைக்கும் கால்ஷீட் கொடுத்திருந்தா அந்த நேரத்துக்கு வரணும். வந்து படப்பிடிப்பு நடத்துறதும் நடத்தாததும் அவங்க இஷ்டம். ஆனா நான் சரியான நேரத்துக்கு வந்துடுறேன்னு வந்து இருந்துடுவாரு சிவாஜி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.    

Tags:    

Similar News