சூர்யாவுக்கும் எனக்கும் ஒரே ரோல் தான்!.. ரெட்ரோவில் அம்மா!.. சூர்யா 46ல் சுவாசிகா ரோல் என்ன?

சூர்யா தனது 46வது படத்தில் வழக்கறிஞராக நடித்து வரும் நிலையில், சுவாசிகாவும் வக்கீலாக நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது.;

By :  SARANYA
Published On 2025-05-17 21:00 IST   |   Updated On 2025-05-17 21:00:00 IST

நடிகர் சூர்யாவுக்கு இந்த ஆண்டு வெளியான ரெட்ரோ திரைப்படம் 104 கோடி ரூபாய் வசூலை வாரிக் கொடுத்தது. லாபத்தை ஈட்டிக் கொடுத்தது அதில், சுமார் 10 கோடி ரூபாயை அகரம் அறக்கட்டளைக்கு அன்பளிப்பாக வழங்கினார். ஆனால், அவரால் பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்தின் வசூலை முறியடிக்கவில்லை.

65 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 104 கோடி ரூபாய் வரை வசூல் வந்தது லாபம் தான் என்றாலும், தமிழ்நாட்டில் சசிகுமாரின் டூரிங் டாக்கீஸ் திரைப்படம் ரெட்ரோ வசூலை முறியடித்து விட்டதாக திரையரங்க உரிமையளர்கள் சங்கத்தின் செயலாளர் ஸ்ரீதர் பேசியது சூர்யா ரசிகர்களை காண்டாக்கி விட்டது.


அஜித் குமார் துணிவு படத்துக்குப் பிறகு குட் பேட் அக்லி படத்தைக் கொடுத்தாலும் அவரால் 200 கோடி வசூலுக்கு மேல் தாண்ட முடியவில்லை. அடுத்து சூர்யாவின் 46வது படம் வேட்டை கறுப்பு என டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படும் அந்த படத்திலும் சுவாசிகா நடித்து வருகிறார்.

லப்பர் பந்து படத்திற்கு பிறகு தொடர்ந்து தமிழில் ரெட்ரோ, மாமன் என நடித்து வருகிறார். சூர்யா 46 படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கி வரும் நிலையில், அந்த படத்தில் த்ரிஷா ஹீரோவாக நடித்து வரும் நிலையில், சுவாசிகாவின் கதாபாத்திரம் குறித்து பேட்டி ஒன்றில் கேள்வி கேட்க, இந்த படத்தில் சூர்யா, த்ரிஷா, நான் எல்லாருமே ஒரே ரோல் தான் எனக் கூறியுள்ளார்.

சூர்யா இந்த படத்தில் வழக்கறிஞராக நடித்து வரும் நிலையில், சுவாசிகாவும் வக்கீலாக நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. ரெட்ரோ படத்தில் வளர்ப்பு அம்மாவாக சுவாசிகா நடித்திருந்தாலும் சூர்யாவுக்கும் அவருக்கும் காம்பினேஷன் காட்சிகள் இருக்காது. ஆனால், இந்த படத்தில் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை இருவருக்கும் இடையே ஏகப்பட்ட காட்சிகள் உண்டு எனக்கூறியுள்ளார்.

Tags:    

Similar News