பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் புஷ்பா 2.. கோடிகளில் கல்லாகட்டும் படத்தின் வசூல்!..
புஷ்பா 2 திரைப்படம் 8வது நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
புஷ்பா 2:
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா 2. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் ஏகபோக ஆதரவு கொடுத்து வருகிறார்கள். படம் ஒவ்வொரு நாளும் மிகப்பெரிய வெற்றியை சந்தித்து வருகின்றது.
கடந்த 2021 ஆம் ஆண்டு இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி 1000 கோடி வசூல் செய்த நிலையில், இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகமும் அதனை விட மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது 3 வருட காத்திருப்புக்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
ரசிகர்கள் விமர்சனம்:
படத்தில் சில லாஜிக் மிஸ்டேக்குகள் இருந்தாலும், அதெல்லாம் படத்தில் ஒரு குறையாகவே தெரியவில்லை. அந்த அளவிற்கு ஒவ்வொரு சீனையும் செதுக்கி இருக்கின்றார் இயக்குனர் சுகுமார். மேலும் மொத்த திரைப்படத்தையும் அல்லு அர்ஜுன் தனது தோளில் சுமந்து இருக்கின்றார். படம் முழுக்க மாஸ் சீன்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இப்படம் தெலுங்கு மட்டும் இல்லாமல் ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் அனைத்து மொழிகளிலும் சக்க போடு போட்டு வருகின்றது.
படத்தின் வசூல்:
இந்த திரைப்படத்தை மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனம் 600 கோடி பட்ஜெட்டில் எடுத்திருக்கிறார்கள். ஆனால் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னதாகவே ஆயிரம் கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆனதாக கூறப்படுகின்றது. படம் ரிலீஸ் ஆன முதல் நாளிலேயே 294 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளதாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார்கள்.
படத்திற்கு கிடைத்த மிகுந்த வரவேற்பு காரணத்தால் தியேட்டர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டது. படம் இரண்டாவது நாளில் 449 கோடியும், மூன்றாவது நாளில் 621 கோடியும், நான்காவது நாளில் 829 கோடியும், ஐந்தாவது நாளில் 922 கோடியும், ஆறாவது நாளில் 1002 கோடியும் வசூல் செய்துள்ளதாக படக்குழுவினராக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்கள். மேலும் ஏழாவது நாளில் படம் 1055 கோடியும் வசூல் செய்துள்ளது.
எட்டாவது நாளான நேற்று இந்த திரைப்படம் 1067 முதல் 1100 கோடி வசூல் செய்திருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகின்றது. தொடர்ந்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து அனைத்து திரைப்படங்களின் சாதனைகளையும் முறியடித்து இந்த திரைப்படம் முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கின்றது. படம் வெளியான முதல் 7 நாட்களில் உலகம் முழுவதும் 1000 கோடி வசூல் செய்தது. புஷ்பா 2 பிரபாஸின் கல்கி திரைப்படம், பாகுபலி 2, ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் 2 படத்தின் வசூலையும் முறியடித்து புஷ்பா 2 திரைப்படம் முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கின்றது.