முகத்தை மூடிக்கிட்டுதான் வரணும்! கமல் படத்தை பற்றி இப்படி சொல்லிட்டாரே ராஜகுமாரன்
kamalhasan
Kamal:சினிமாவைப் பொறுத்த வரைக்கும் ஒரு படம் தான் தனக்குரிய அடையாளம் என ஒவ்வொரு கலைஞர்களுக்கும் இருக்கிற விஷயமாக பார்க்கப்படுகிறது .அந்த வகையில் இயக்குனர் ராஜகுமாரன் என்றால் உடனே நம் நினைவுக்கு வருவது அவர் இயக்கிய நீ வருவாய் என திரைப்படம். 90 கள் காலகட்டத்தில் குடும்ப படங்களை எடுத்து மக்கள் மத்தியில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக மாறியவர்தான் ராஜகுமாரன்.
இவரை போல விக்ரமன், கே எஸ் ரவிக்குமார், அகத்தியன் என அனைவரும் குடும்ப சப்ஜெக்டை மையப்படுத்தி தான் படங்களை எடுத்து ஒரு முன்னணி இயக்குனர்களாக வலம் வந்தனர் .அந்த வகையில் இப்பொழுது குடும்ப படம் என்பது எந்த வகையில் ரசிகர்களை ஈர்த்து வருகிறது என்பதற்கு சில விஷயங்களை அவர் கூறி இருக்கிறார். குடும்ப படம் என்றால் உடனே நம் நினைவுக்கு வருவது சிவகார்த்திகேயன் தான் .
இதைப் பற்றிய அவர் கூறும்பொழுது சிவகார்த்திகேயன் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார். கண்ணை மூடிக்கொண்டு இவர் படத்திற்கு போகலாம் என்றால் அது சிவகார்த்திகேயன் படம் மட்டும்தான். சினிமாவிற்கு என ஒரு ஒழுங்கு முறை இருக்கிறது .அதை சிவகார்த்திகேயன் சரியாக பயன்படுத்தி இப்போது வரை கொண்டு செலுத்தி வருகிறார்.
குழந்தைகளை அழைத்துக் கொண்டு படம் பார்க்க போகிறோம் என்றால் சில படங்களை நம் பார்க்க முடியாது. ஆனால் சிவகார்த்திகேயன் படத்தை குடும்பத்தோடு நாம் பார்க்கலாம். அதனால் தான் அவர் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார். சில படங்கள் ஒரு மாதிரியாக இருக்கும். சில படங்கள் வேறு மாதிரியாக இருக்கும். உதாரணமாக கமல் படங்களையே எடுத்துக் கொண்டோம் என்றால் சலங்கை ஒலி போன்ற படங்களை பார்த்து விட்டு வரலாம்.
sivakarthikeyan
ஆனால் இன்னொரு படத்தை பார்த்துவிட்டு வரும் பொழுது முகத்தை மூடிக்கொண்டு தான் வரவேண்டும் .ஆனால் சிவகார்த்திகேயன் படங்கள் அப்படி கிடையாது. யாருமே சினிமாவில் இந்த மாதிரி இல்லை. என்னை பொருத்தவரைக்கும் சொல்கிறேன். அவரை ஆரம்பத்தில் இருந்து நான் பார்த்து வருகிறேன். அவர் படங்களை பார்த்துவிட்டு ஒவ்வொரு முறையும் அவருக்கு மெசேஜ் அனுப்புவேன் .ஹாய் சூப்பர் ஸ்டார் என்று தான் சொல்லி அவரை கூப்பிடுவேன். சரியாக புடித்து விட்டார் என ராஜகுமாரன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.