முதலில் நடிக்க மறுத்து பின் ஆர்வம் காட்டிய ரஜினி.. கடைசியில் கமலிடம் சென்ற அந்த ப்ராஜக்ட்
rajini_kamal
தமிழ் சினிமாவில் இரு பெரும் ஜாம்பவான்களாக இருப்பவர்கள் நடிகர் ரஜினி மற்றும் கமல். கிட்டத்தட்ட இவர்களுக்கு இடையில் 40 ஆண்டுகால நட்பு. ஆரம்பத்தில் பல படங்களில் இருவரும் ஒன்றாகவே நடித்து வந்தனர். கிட்டத்தட்ட 16 படங்கள் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருக்கின்றனர். அவர்கள் இணைந்து நடித்த அத்தனை திரைப்படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்கள் ஆகும். மீண்டும் இவர்கள் எப்போது இணைந்து நடிப்பார்கள் என்ற ஒரு ஆர்வத்தை இப்போது வரை இவர்கள் ஏற்படுத்தி வருகிறார்கள்.
ஆனால் ஒரு கட்டத்தில் இருவருமே சேர்ந்து இனிமேல் நாம் இணைந்து படம் நடிக்க வேண்டாம். ஒவ்வொருவருக்கும் தனித்தனி மார்க்கெட் வந்துவிட்டது. அதனால் இணைந்து நடிக்க வேண்டாம் என்ற முடிவெடுத்த பிறகு அதை இப்போது வரை கடைபிடித்து வருகின்றனர். ஆனால் பல இயக்குனர்கள் எப்படியாவது இவர்கள் இணைந்து நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டு அவர்களிடமே கேட்டிருக்கின்றனர். இதுவரை எந்த பதிலும் ரஜினி கமல் இடம் இருந்து வரவில்லை. இதில் ரஜினிக்கு சீனியர் கமல். கிட்டத்தட்ட அவர் சினிமாவிற்கு வந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்டது.
ரஜினி இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் கமலை விட அதிக புகழையும் பெயரையும் கொண்டவராக ரஜினி விளங்குகிறார். இருவருக்குள்ளும் தொழில் முனையில் போட்டியிருந்தாலும் நிஜத்தில் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர் .தமிழ் திரையுலகில் நடிகர்களுக்கிடையே நட்பு என்பது அவ்வளவு எளிதாக நடந்து விடாது. ஆனால் ரஜினி கமலை பொறுத்தவரைக்கும் அன்றிலிருந்து இன்று வரை நட்புக்கு அடையாளமாக இருவரும் திகழ்ந்து வருகின்றனர். அதை பல மேடைகளில் அவர்கள் வெளிப்படுத்தியும் இருக்கின்றனர்.
இந்த நிலையில் பாபநாசம் படம் குறித்த தகவலை அந்த படத்தின் இயக்குனர் ஜித்து ஜோசப் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் .மலையாளத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக் தான் பாபநாசம். இது 2015 ஆம் ஆண்டு வெளியானது .முதலில் இந்தப் படத்தில் ரஜினியை நடிக்க வைக்க தான் இயக்குனர் ஆசைப்பட்டிருக்கிறார். இந்த கதையை ரஜினியிடமும் போய் சொல்லி இருக்கிறார். ரஜினிக்கு இந்த கதை மிகவும் பிடித்து போய் இருக்கிறது.
papanasam
ஆனால் அந்த படத்தில் வரும் போலீஸ், காவல் நிலையம் சம்பந்தப்பட்ட காட்சிகள் ரஜினியின் ரசிகர்களுக்கு பிடிக்காமல் போகலாம் என நினைத்து முதலில் ரஜினி அதை மறுத்து விட்டாராம் .அதன் பிறகு தான் கமல் உடனடியாக அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்த படத்தில் கமல் ஒப்பந்தமாகிவிட்டார் என்று தெரியாமல் அந்த படத்தின் கதையால் ஈர்க்கப்பட்ட ரஜினி நான் இதில் நடிக்கிறேன் என கூறினாராம். அதன் பிறகு கமல் இந்த படத்தில் ஒப்பந்தம் ஆகிவிட்டார் என்று சொன்னதும் ஓகே பரவாயில்லை ஆல் தி பெஸ்ட் என்று மிகவும் பணிவுடன் கூறினாராம் ரஜினி.