என்னாச்சு ரஜினிக்கு? அன்னைக்கும் இதே குழப்பம்தான்... இன்னைக்குமா?

By :  Sankaran
Update: 2024-12-29 03:01 GMT

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்த 74வயதிலும் சினிமாவில் பிசியாக பல படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். ஜெயிலர் படத்திற்குப் பிறகு வேட்டையன் படத்தில் நடித்தார். இப்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். அடுத்து ஜெயிலர் 2வில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் ரஜினிகாந்த் படுபிசியாக நடிக்கிறார் என்பதே ஆச்சரியம்தான். அது ஒருபுறம் இருக்க தற்போது ஒரு ஆச்சரியமான சம்பவம் அரங்கேறியுள்ளது. என்னன்னு பார்க்கலாமா...

கேப்டன் விஜயகாந்த் நினைவுதினம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு வாழ்த்துக்கள் என்று ரஜினிகாந்த் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

கேப்டன் விஜயகாந்துக்கு நேற்று முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது. அதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். கேள்வியை முழுமையாகக் கூட உள்வாங்காத ரஜினிகாந்த் உடனடியாக 'வாழ்த்துகள்' என கூற இந்தப் பதிலை சற்றும் எதிர்பாராத செய்தியாளர்கள் அதிர்ச்சி ஆகினர். மறுபடியும் விஜயகாந்த் இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது என செய்தியாளர்கள் விளக்கிக் கூற புரிந்து கொண்ட ரஜினிகாந்த் 'ஓஹோஹோ 'என்றார் சற்றே சோகமாக.


அதன்பின் மெதுவாக நகர்ந்து கொண்டார். ஏற்கனவே திருவண்ணாமலை நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலியானபோதும் செய்தியாளர்கள் அதுகுறித்து அப்போது கேள்வி எழுப்பினர். அதற்கு 'அப்படியா.... ஓ மை காட்' என்று அதைப் பற்றி எனக்குத் தெரியாதே என்ற ரீதியில் அதிர்ச்சியைக் கிளப்பினார்.

74 வயதிலும் துருதுருவென படங்களில் நடித்து வரும் ரஜினிகாந்த் ரொம்ப பிசியாக இருப்பதால் தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்க தவறிவிட்டார் என்றே தோன்றுகிறது. ரஜினி இதுபோன்ற சமயங்களில் அதாவது ஒரு படப்பிடிப்பு முடிவடைந்தால் மறுபடியும் ஓய்வு எடுப்பது வழக்கம். அடிக்கடி முன்பு இமயமலை செல்வார்.

அங்கு போய் தியானம் செய்து விட்டு பாபா சுவாமிஜியைத் தரிசித்து விட்டு வருவார். ரிலாக்ஸாக இருப்பார். அது இப்போது கொஞ்சம் மிஸ் ஆவது போல் தெரிகிறது. எது எப்படியோ ரஜினி அடிக்கடி சொல்வது இதுதான். நான் யானை அல்ல. குதிரை. விழுந்தா டக்குன்னு எழுந்துடுவேன்னு. அப்படியே நடக்கட்டும் என்பது தான் ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.

Tags:    

Similar News