ஆசைப்பட்ட தனுஷ்... கைவிட்ட ரஜினி... ஜெயிலர் 2விலாவது அது நிறைவேறுமா?

By :  Sankaran
Update: 2024-12-28 02:30 GMT

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 74வயதிலும் இளமை துடிப்புடன் அசராமல் நடித்து வருவது ரசிகர்கள் மட்டும் அல்லாது திரையுலகினர் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது. அவர் தனது கடைசி படம் என்று பாபாவைத் தான் சொன்னார்.

அதன்பிறகு எத்தனையோ படங்களில் நடித்து முடித்து விட்டார். இப்போதும் பிசியாக இருக்கிறார் என்றால் அது ஆச்சரியம்தான். ரஜினிகாந்துடன் நடிக்க அவரது முன்னாள் மருமகன் தனுஷ் ஆசைப்படுவதாக தகவல்கள் வந்துள்ளன. இதுபற்றி வாங்க பார்க்கலாம்.

தமிழ்சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் தனுஷ். இவருக்கு தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு மிகவும் பிடித்த நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினி. அவரது திரைப்படங்களுக்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்து விடுவார்.

சமீபத்தில் ரஜினியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார். இவரது சினிமா பயணத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்க வேண்டும் என்பது ஆசை. அதே போல அவருடன் பயோபிக்கிலும் நடிக்க வேண்டும் என்பது ஆசை என்பதை ஒரு மேடையில் கூறி இருக்கிறார்.

இந்நிலையில் தனுஷ் காலா படத்தைத் தயாரித்து இருந்தார். அந்தப் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு மகனாக நடிக்க பேச்சுவார்த்தையும் நடந்தது. ஆனால் ரஜினிகாந்த் வேண்டாம் என கூறிவிட்டார். தற்போது ஜெயிலர் 2ம் பாகத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.


தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருவதால் தனுஷ் ரஜினியுடன் இணைந்து நடிப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சூப்பர்ஸ்டார் படம் என்றாலே தனது மற்ற படங்களை ஒதுக்கி விட்டு ரஜினியுடன் இணைந்து நடிப்பார் என்றே கூறப்படுகிறது.

ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதால் அதன் 2ம் பாகத்திற்கும் பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. அந்த வகையில் ஜெயிலர் 2 ம் பாகம் வெளியானால் 1000 கோடி வசூலை ஈட்டும் என்றும் கூறப்படுகிறது. அந்தவகையில் தமிழ்சினிமாவில் அடுத்தடுத்த 1000 கோடி வசூலைக் கொடுக்க இருக்கிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்றே சொல்லலாம்.  

Tags:    

Similar News