மகன்களை பார்க்க கூட விடல!.. நான் கடனாளி ஆக காரணமே ஆர்த்திதான்!. பொங்கிய ரவி மோகன்...

By :  AKHILAN
Published On 2025-05-15 15:23 IST   |   Updated On 2025-05-15 16:40:00 IST

Ravi Mohan: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் தன் மீது பரவி வரும் விஷயங்கள் குறித்து முதன்முறையாக நிறைய விஷயங்களை பேசி இருக்கும் ஸ்டேட்மெண்ட் வைரலாகி வருகிறது.

மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட பிறகு ரவி மோகன் நடிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் ஐசரி கணேஷ் விட்டு திருமண விழாவில் ஒரே நிற உடையில் பாடகி கெனிஷா பிரான்சிஸுடன் வர விஷயம் பற்றிக்கொண்டது.

தொடர்ந்து ரவி மோகனின் மனைவி ஆர்த்தி ரவி தன் மகன்களை முன் வைத்து தாயாக நான் போராடி வருகிறேன் என அறிக்கை வெளியிட்டு ஆதரவு தேடினார். அவருக்கு ராதிகா, குஷ்பூ உள்ளிட்ட முன்னணி நடிகைகள் ஓபனாகவே ஆர்த்தி பக்கம் பேசி இருந்தனர். 

 

இந்நிலையில் ரவி மோகன் இந்த விஷயங்கள் குறித்து மனம் திறந்து இருக்கிறார். அந்த அறிக்கையில், என்னுடைய விவாகரத்து விவகாரம் குறித்து ஏற்கனவே குடும்பத்தினருக்கு தெரியும். என் முன்னாள் மனைவியின் தனியுரிமை குறித்து மதிக்கவே நான் விரும்பினேன்.

அதனால்தான் நான் அமைதியாகவே இருந்தேன். ஆர்த்தி என் முன்னாள் மனைவிதான். என் வீட்டை விட்டு வெளியில் வந்த போதே அவரை என் முன்னாள் என முடிவு செய்துவிட்டேன். என் கடைசி மூச்சு வரை இனி அது அப்படியே இருக்கும்.

ஆனால் என்னை உடைப்பது என்னவென்றால், நிதி ஆதாயத்துக்காக என்னுடைய குழந்தைகள் பயன்படுத்தப்படுகின்றனர். அவர்கள் அனுதாபத்தையும் தூண்ட அவர்கள் வைத்து கதை திரிக்கப்படுகிறது. நாங்கள் பிரிந்ததில் இருந்து அவர்களை பார்க்க நான் அனுமதிக்கவிடவில்லை.

கடந்த கிறிஸ்துமஸில் நடந்த நீதிமன்ற கூட்டத்தை தவிர அனைத்து தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. அவர்களுடன் பவுன்சர்கள் எப்போதும் இருக்கின்றனர். அவர்கள் விபத்தில் சிக்கிய போது அந்த விவரம் கூட எனக்கு சொல்லவில்லை. மூன்றாம் மனிதர் போல கார் ரிப்பேர் இன்சூரன்ஸ் கையெழுத்திற்காக மட்டுமே நான் தேவைப்பட்டேன்.

அவர்கள் உண்மையை தெரிந்து கொள்ளும் போது அப்பாவாக என்னை புரிந்து கொள்வார்கள். கடந்த 5 வருடங்களில் என் சம்பாத்தியத்தில் பெற்றோருக்கு ஒரு பைசா கூட அனுப்பப்படவில்லை. சினிமாத்துறையில் இருப்பவர்கள் எல்லாருக்குமே உண்மை தெரியும். 

 

அவர்கள் பல கோடி கடனுக்கு நான் ஜாமீன் கையெழுத்து போட்டு இருக்கிறேன். கடந்த 10 நாட்களுக்கு முன்னர் கூட என்னுடைய ஜாமீன் கையெழுத்தை வைத்து ஒரு படத்தில் நடிக்க அவர் அம்மா வலியுறுத்தினார். பிரச்னைக்கு தீர்வு நீதிமன்றத்தில் தான் கிடைக்க வேண்டுமே தவிர சமூக வலைத்தளத்தில் அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார் 

Tags:    

Similar News