அழகான துணை கெனிஷா.. பகிரங்கமாக அறிவிப்பை வெளியிட்ட ரவிமோகன்
ravimohan
சமீபத்தில் ஐசரி கணேஷ் இல்ல திருமணத்திற்கு ரவிமோகனும் கெனிஷாவும் ஒன்றாக வந்தது அனைவருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அன்று மாலையே ஆர்த்திரவி இரண்டு பக்க அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் இவ்ளோ நாள் நான் அமைதி காத்துவந்தேன். என் குழந்தைகளுக்காக நான் போராடுவேன். என்னை பல பத்திரிக்கைகளில் முன்னாள் மனைவி என குறிப்பிடுகின்றனர்.
இந்த பிரச்னை தொடர்பாக இன்னும் வழக்கு நீதிமன்றத்தில் போய்க் கொண்டிருப்பதால் முன்னாள் மனைவி என சொல்ல வேண்டாம் என பல விஷயங்களை சொல்லியிருந்தார். இதற்கிடையில் இன்று ஜெயம் ரவி நான்கு பக்கம் கொண்ட ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில் முக்கியமாக கெனிஷாவுக்கும் அவருக்குமான உறவு எப்படிப்பட்டது என்பது பற்றியும் கூறியிருக்கிறார். அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
இத்தனை வருடமாக என் முதுகில் குத்தப்பட்டு இருந்தேன். தற்போது நெஞ்சில் குத்தப்பட்டது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. எனது முன்னாள் மனைவியை மட்டுமே விட்டு விலக முடிவு செய்தேன். எனது குழந்தைகளை அல்ல. எனது குழந்தைகள்தான் என்னுடைய பெருமை மகிழ்ச்சி. அவர்களுக்காக அனைத்துமே செய்வேன். சில நாள்களாக எனக்கிருக்கும் வருத்தம், 16 ஆண்டுகால துயரமான வாழ்க்கையைவிட பெரிதல்ல. கடந்த ஐந்து ஆண்டுகளாக எனது வருமானத்தை பெற்றோருக்கு கூட அனுப்ப மறுக்கப்பட்டேன்.
இத்தை நாள்களாக அமைதியாக பொறுமையாக இருந்தேன். எனது அமைதிக்கும் எல்லை உண்டு. என்னுடைய வீட்டை விட்டு ஏதுமில்லாமல் நான் வெளியேறிய போது எனக்கு அழகான துணையாக நின்றவர் கெனிஷா ஃபிரான்சிஸ். அவர் ஒரு அழகான துணை. வாழ்க்கையில் சந்தித்த சட்ட, உணர்வு, நிதி ரீதியான எல்லா பிரச்னைகளிலும் என்னுடன் இருந்தார்.
என்னுடைய கதையை கேட்ட அடுத்த நிமிடத்தில் இருந்து ஒரு மனநல ஆலோசகராக இல்லாமல், தோழியாக இருந்து உதவினார். நான் கண்ணீர், ரத்தம், என துடித்துக் கொண்டிருந்த போது என் துன்பங்களில் இருந்து மீட்டவர் கெனிஷா. எந்த ஆதரவும் இன்றி வீட்டை விட்டு வெளியேறிய போது எனக்கு ஆதரவாக பக்கபலமாக இருந்தவரும் அவர்தான். அவர்தான் என் வாழ்க்கையில் ஒளியை கொண்டு வந்தார். கெனிஷாவை அவமதிக்கும் எந்த செயலையும் நான் அனுமதிக்க மாட்டேன் என குறிப்பிட்டிருக்கிறார் ரவிமோகன்.