ஹிட் பட இயக்குனர்களுடன் படம் பண்ண காரணம் இதுதான்!.. ஜோசியம் பார்க்கும் ரஜினி!..
நடிகர் பல வருடங்களாகவே ஏற்கனவே தன்னை வைத்து படமெடுத்து ஹிட் கொடுத்த சுரேஷ் கிருஷ்ணா, கே.எஸ்.ரவிக்குமார் போன்ற சீனியர் இயக்குனர்களின் படங்களில் மட்டுமே நடித்து வந்தார். ஆனால், எப்போது விஜய் அவரை வியாபாரத்திலும், சம்பளத்திலும் ஓவர் டேக் செய்தாரோ அதுமுதல் தன்னுடைய ரூட்டை மாற்றினார்.
கரண்ட் டிரெங்கில் ஹிட் கொடுக்கும் இளம் இயக்குனர்களை அழைத்து பேசினார். அவர்களிடம் தனக்காக கதை எழுத சொல்லி அதில் நடிக்க துவங்கினார். இதற்கு பல உதாரணங்கள் இருக்கிறது. அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விஸ்வாசம் போன்ற ஹிட் படங்களை கொடுத்த சிறுத்தை சிவாவை அழைத்து தனக்காக ஒரு கதை பண்ண சொன்னார். அப்படி உருவான படம்தான் அண்ணாத்தே.
அதேபோல், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஹிட் கொடுத்த தேசிங்கு பெரியசாமி, டான் படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி ஆகியோரை அழைத்து எனக்காக ஒரு கதை பண்ணுங்கள் என்றார். ஆனால், அந்த இரண்டு இயக்குனர்களின் கதைகளிலும் ரஜினி நடிக்கவில்லை. ரஜினிக்கு தேசிங்கு பெரியசாமி சொன்ன கதையில்தான் இப்போது சிம்பு நடிக்கவுள்ளார். மேலும், ப.ரஞ்சித்தை அழைத்து பேசி அவரின் இயக்கத்தில் கபாலி, காலா போன்ற படங்களில் நடித்தார். கார்த்திக் சுப்பாராஜ் இயக்கட்த்தில் பேட்ட படத்தில் நடித்தார்.
அதேபோல், கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை இயக்கிய நெல்சனை அழைத்து அவரின் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்தார். இந்த படம் ரஜினிக்கு ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்து 700 கோடி வரை வசூல் செய்து சாதனை செய்தது. சந்திரமுகி படத்திற்கு பின் இதுதான் ரஜினிக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
கமலை வைத்து விக்ரம் எனும் சூப்பர் ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் இப்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஹிட் அடிக்கும் என சொல்லவே தேவையில்லை. லோகேஷின் ஸ்டைலில் பக்கா ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ளது. வருகிற ஆகஸ்டு 14ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இப்போது மீண்டும் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2-வில் நடித்து வருகிறார்.
கரண்ட் டிரெண்டிங்கில் ஹிட் கொடுக்கும் இளம் இயக்குனர்கள் ரஜினி கைகோர்க்க ஒரு காரணம் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒரு இயக்குனர் வெற்றியை கொடுத்தால் அவருக்கு நேரம் நன்றாக இருப்பதாக அர்த்தம். எனவே, அவரோ நாமும் சேர்ந்தால் நமது கெட்ட நேரமும் நல்ல நேரமாக மாறிவிடும் என நினைப்பாராம் ரஜினி. இப்போது கூட ஹெ.வினோத் மற்றும் வீர தீர சூரன் பட இயக்குனர் அருண்குமார் ஆகியோர் அடுத்த லிஸ்ட்டில் இருக்கிறார்கள்.
ரஜினியின் சக்சஸ் பார்முலாவுக்கு பின்னால் இருக்கும் இதுதான் காரணம் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.