ஜெயம் ரவிக்கிட்ட பேசுனது குத்தமாடா? உனக்கு என்னம்மா பிரச்னை? பொங்கிய கூல் சுரேஷ்
சமீபத்தில் பிரபல சினிமா தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வீட்டு திருமண விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். ஆளுநரிலிருந்து அமைச்சர்கள் வரை அத்தனை அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர் .ஒரு திருவிழா போலவே மாற்றிவிட்டார் ஐசரி கணேஷ். தன்னுடைய மகள் ஆசைக்காக பிரம்மாண்டமாக நடத்திவிட்டார். இந்த திருமணத்தில் ஹைலைட்டாக பார்க்கப்பட்ட விஷயம் என்னவெனில் ஜெயம் ரவி கெனிஷாவுடன் வந்ததுதான்.
அது பெரிய அளவில் ட்ரெண்டிங் ஆனது. அப்போது ஜெயம் ரவியுடன் கூல் சுரேஷ் பேசுவது மாதிரியான ஒரு வீடியோவும் வைரலானது. அதைப்பற்றி இன்று ஒரு பட விழாவில் பேசிய கூல் சுரேஷ் அந்த வீடியோவை பார்த்துவிட்டு இரவு 11:30 மணியளவில் எனக்கு ஒரு லேடி தொலைபேசி வாயிலாக அழைத்தார். அவர் என்னிடம் பேசும் பொழுது நீங்க ஏன் ஜெயம் ரவிக்கு சப்போர்ட்டா பேசுறீங்க? அவங்க பண்ணது நியாயமா? என்றெல்லாம் கண்டபடி என்னை திட்டி விட்டார்.
ஜெயம் ரவி நம்பர் இருந்தால் கொடுங்கள் அல்லது ஆர்த்தி நம்பர் இருந்தால் கொடுங்கள் என என்னிடம் கேட்டு டார்ச்சர் செய்துவிட்டார். இப்பொழுது என்னுடைய கருத்து என்னவெனில் அங்கு என்ன பிரச்சனை என்றே நமக்கு தெரியாது. ஜெயம் ரவிக்கும் ஆர்த்திக்கும் எந்த மாதிரியான பிரச்சனை போய்க்கொண்டிருக்கிறது என யாருக்குமே தெரியாது. ஏன் அவர்களுடைய பெற்றோர்களுக்கே தெரியாது.
திருமண விழாவில் அவர் என்னிடம் வந்து பேசும்பொழுது ஆளே மாறிட்டீங்க காஸ்டியூம் சூப்பராக இருக்கிறது படத்தில் ஹீரோவா நடிச்சுக்கிட்டு இருக்கீங்க அந்த வீடியோ எல்லாம் பார்த்தேன் சாப்பிட்டீங்களா இதைத்தான் என்னிடம் கேட்டார். அதற்குள் என்னென்னமோ சமூக வலைதளங்களில் கமெண்ட்களை போட்டு என்னை திட்டி வருகிறார்கள் ரசிகர்கள். அவங்க குடும்ப பிரச்சனை. அது நீதிமன்றத்தில் இருக்கிறது.
jayamravi
அது அவர்களே பார்த்துக் கொள்வார்கள். குடும்பத்தில் எல்லாருக்கும் எல்லா பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்யும். அது ஜெயம் ரவியாக இருந்தாலும் சரி ராதாரவியாக இருந்தாலும் சரி நிழல்கள் ரவியாக இருந்தாலும் சரி ஏன் ஆளுநர் ஆர் என் ரவியாக இருந்தாலும் சரி. எல்லார் வீட்லயும் பிரச்சனை இருக்கத்தான் செய்யும். அதனால் அது அவர்களே பார்த்துக் கொள்வார்கள். ஆனால் சீக்கிரம் இதற்கு ஒரு முடிவு கிடைத்து இருவரும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்றுதான் ஒரு ரசிகனாக நானும் ஆசைப்படுகிறேன் என கூல் சுரேஷ் கூறினார்.