யூடியூபில் பட்டையை கிளப்பிய அப்யங்கர் பாடல்.. 14 மணி நேரத்தில் இப்படி ஒரு சாதனையா?..

By :  Ramya
Update: 2025-02-01 10:02 GMT

Sai Abhyankkar: இந்திய சினிமாவில் பிரபல பாடகர்களாக இருக்கும் திப்பு மற்றும் ஹரிணி தம்பதியினரின் மகன் சாய் அப்யங்கர். தற்போது இவருக்கு வயது 21. சென்னையில் ஐஐடி கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கின்றார். இந்த வயதிலும் தனது தாய் தந்தையரை போல இசை மீது அதிக கொண்ட சாய் அப்யங்கர் தொடர்ந்து பாடல் எழுதுவது, இசையமைப்பது, புரோகிராமிங் என அனைத்திலும் பயிற்சி பெற்றிருக்கின்றார்.

முதல் பாடல்: இசை மீது அலாதி பிரியம் கொண்ட சாய் அப்யங்கர் தொடர்ந்து பாடல் இசை அமைப்பதில் கவனம் செலுத்தி வருகின்றார். இவர் முதன் முதலாக 'கட்சி சேரா' என்ற பாடலை இசை அமைத்திருந்தார். இந்த பாடல் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. 2024 ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட பாடலாக இந்த பாடல் இடம் பிடித்திருக்கின்றது.


யூடுயூபில் சாதனை: யூடுயூபில் கட்சி சேரா பாடல் வெளியாகி கிட்டத்தட்ட 194 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்திருக்கின்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாவதாக ஆச கூட என்கின்ற பாடலை பாடியிருந்தார். ஸ்டார் படத்தில் நடித்த பிரீத்தி முகுந்தன் பாடலில் நடித்திருந்தார். இப்பாடலும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுக்க அதிகம் பேசப்படும் ஒரு நபராக தமிழ் சினிமாவில் மாறினார் சாய் அப்யங்கர்.

சித்திர புத்திரி பாடல்: தான் இசையமைத்த இரண்டு பாடல்களும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில் மூன்றாவதாக சித்திர புத்திரி என்கின்ற பாடலை இசையமைத்து இருக்கின்றார். இந்த பாடலில் நடிகை மீனாட்சி சவுத்ரி நடித்திருக்கின்றார். மேலும் சாய் அப்யங்கர் இப்பாடலில் நடனமாடி இருக்கின்றார். இந்த பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றது.

இந்த பாடல் நேற்று இரவு 7 மணிக்கு வெளியான நிலையில் யூடுயூபில் ட்ரெண்டிங்கில் இரண்டாம் இடம் பிடித்திருக்கின்றது. அதாவது இந்த பாடல் யூடுயூபில் வெளியான 14 மணி நேரத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து இருக்கின்றது. கட்சி சேரா மற்றும் ஆச கூட என இரண்டு பாடல்களும் மிகப்பெரிய ஹிட் கொடுத்த நிலையில் மூன்றாவது பாடலும் ஹிட்டாகி இருக்கின்றது.

ஹாட்ரிக் வெற்றி: இதனால் ஹாட்ரிக் வெற்றியை குவித்து இருக்கின்றார் சாய் அப்யங்கர். இளம் இசையமைப்பாளராக தனது இசை பயணத்தை தொடங்கி இருக்கும் சாய் தொடர்ந்து சினிமாவில் கால்பதிக்க இருக்கின்றார். தற்போது ராகவா லாரன்ஸ் நடித்துவரும் பென்ஸ் திரைப்படத்தில் கமிட்டாகி இருக்கின்றார். அதனை தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கி வரும் சூர்யா 45 திரைப்படத்திற்கும் இவர்தான் இசையமைப்பாளராக இருக்கின்றார்.


முதலில் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்த நிலையில் தற்போது சாய் அப்யங்கர் இசையமைக்கின்றார். திரைப்படத்தில் இவரின் பாடல்களை பார்ப்பதற்கு ரசிகர்கள் பலரும் ஆவலாக இருந்து வருகிறார்கள். விரைவில் அனிருத்துக்கு டஃப் கொடுக்க ஒரு இளம் இசையமைப்பாளர் களமிறங்கி விட்டார் என்று தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் பேசி வருகிறார்கள்.

Tags:    

Similar News