இதுல ஒன்னும் தப்பு இல்லையே.. தேவயாணி husband விஷயத்தில் வாய்திறந்த சந்தானம்

By :  ROHINI
Update: 2025-05-14 06:50 GMT

santhanam

Santhanam: தற்போது சந்தானம் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படம் வரும் 16ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக இருக்கின்றது. படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. பல youtube சேனல்களுக்கு சந்தானம் பேட்டி கொடுத்து வருகிறார். அதில் இந்த படத்தைப் பற்றியும் அவருடைய சினிமா அனுபவங்களை பற்றியும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார் .

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தன்னை பிரதிபலித்த சந்தானம் இப்போது ஹீரோவாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். லொள்ளு சபா நிகழ்ச்சி தான் அவரை சினிமாவிற்கு இழுத்து வந்தது. அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் சிம்பு. லொள்ளு சபா நிகழ்ச்சியில் அவருடைய காமெடி ரசிகர்களால் ஈர்க்கப்பட ஏன் இவர் படத்தில் நடிக்க கூடாது என நினைத்து தன்னுடைய மன்மதன் படத்தின் மூலம் முதன்முதலில் சந்தானத்தை நடிக்க வைத்தார் சிம்பு .

முதல் படத்தில் சிம்பு சந்தானம் காம்போ ரசிகர்களை பெருமளவு ஈர்க்க தொடர்ந்து சிம்புவின் அனைத்து படங்களிலும் சந்தானம் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராகவே மாறினார் சந்தானம். நாகேஷ் வடிவேலு விவேக் இவர்களுக்கெல்லாம் ஒரு தனி பாணி இருக்கும். சந்தானத்திற்கு மற்றவர்களை கிண்டல் செய்தே தன்னுடைய நகைச்சுவையை வளர்த்துக் கொண்டார். தன்னுடன் நடிக்கும் நடிகர்களுக்கு பட்டப்பெயர் வைத்து கூப்பிட்டே மக்களை சிரிக்க வைத்தவர் சந்தானம்.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் சிம்புவுடன் இணைந்து நடிக்க இருக்கிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் கூடிய சீக்கிரம் ஆரம்பித்து விடும். அதற்கு முன்னதாக டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் ஒரு 16ஆம் தேதி ரிலீசாக இருக்கின்றது. 2023 ஆம் ஆண்டு வெளியான டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தின் தொடர்ச்சி தான் இந்த படம். அதனால் படத்தின் மீது ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

சில தினங்களுக்கு முன்பு தேவயானி தன்னுடைய கணவரான ராஜகுமாரன் சந்தானத்துடன் இணைந்து ஒரு காட்சியில் நடித்ததை பற்றி பீல் பண்ணி கூறியிருந்தார். அது எனக்கு பிடிக்கவே இல்லை. அவரை சந்தானம் கிண்டல் செய்தது என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இவரிடம் நான் சத்தம் போட்டேன் என்றெல்லாம் கூறினார். இதைப் பற்றி சந்தானத்திடம் கேட்டபோது ஒரு நடிகர் என்றால் எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிக்க தான் வேண்டும்.

devayani

அதுவும் படத்தில் நடிப்பதற்கு முன்பே அவரிடம் ஸ்கிரிப்ட் எல்லாம் சொல்லி அவர் அனுமதியோடுதான் அந்த காட்சியை நாங்கள் படமாக்கினோம். அவரை போர்ஸ் செய்து நடிக்க வைக்கவில்லை. காமெடியாக இருந்தாலும் சரி அது எந்த கேரக்டராக இருந்தாலும் சரி நடிகன் என வந்துவிட்டால் அதை எல்லாம் நாம் பார்க்க கூடாது, இப்போ பர்ஷனலாக ஒருத்தரை கிண்டல் செய்கிறோம் என்றால் அதுதான் தப்பு என்று சந்தானம் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

Tags:    

Similar News