சிம்பு சொல்லிட்டார்னு காமெடிலாம் பண்ண முடியாது!... ஷாக் கொடுக்கும் சந்தானம்!...
Santhanam: விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் சந்தானம்!. சிம்பு ஹீரோவாக நடித்த முதல் படமான காதல் அழிவதில்லை படத்தில் கூட்டத்தில் நின்று கொண்டிருந்தார். அதன்பின் தான் நடித்த மன்மதன் படத்தில் சந்தானத்துக்கு வாய்ப்பு கொடுத்தார் சிம்பு.
அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்தார். ஒருகட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக மாறினார். கவுண்டமணி சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தபோது அந்த இடத்தை பிடித்தார் சந்தானம். அதாவது, கவுண்டமணியை போலவே நக்கல் அடிக்கும் ஸ்டைலை பின்பற்றினார். அது நன்றாகவே வொர்க் அவுட் ஆனது.
சிம்பு, ஜுவா, ஆர்யா, உதயநிதி போன்ற இளம் ஹீரோக்களுடன் நிறைய படங்களில் நடித்தார். சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்கள் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானது. விஜய், அஜித், ரஜினி ஆகியோரின் படங்களிலும் நடிக்குமளவுக்கு முன்னேறினார். ஆனால், திடீரென இனிமேல் காமெடி வேடங்களில் நடிக்க மாட்டேன். ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
அப்படி அவர் நடிக்க துவங்கி 10 வருடங்கள் ஆகிவிட்டது. 15 படங்களுக்கும் மேல் ஹீரோவாக நடித்துவிட்டார். ஆனால், அதில் தில்லுக்கு துட்டு போன்ற பேய் படங்கள் மட்டுமே ஓடியது. மற்ற படங்களெல்லாம் வெற்றி பெறவில்லை. ஆனால், நடித்தால் ஹீரோதான் என உறுதியாக இருக்கிறார் சந்தானம். ஒருபக்கம், இப்போது தமிழ் சினிமாவில் காமெடி வறட்சியும் நிலவுகிறது. யோகிபாபுவை தவிர காமெடி நடிகர் யாருமே இல்லை. எனவே, சந்தானம் மீண்டும் காமெடி வேடங்களில் நடிக்க வேண்டும் என திரையுலகினர் உள்ளிட்ட பலருமே கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
ஒருபக்கம், சிம்பு நடிக்கும் புதிய படத்தில் அவருடன் நடிக்க சந்தானம் ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்த பட விழாவில் பேசிய சிம்பு ‘சந்தானம் மீண்டும் காமெடி வேடத்தில் நடிக்கவேண்டும். இனிமேல் அதிக படங்களில் பார்க்க முடியும்’ எனபேசியிருந்தார். இந்நிலையில், இதுபற்றி சந்தானத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் சொன்ன சந்தானம் ‘பழைய மாதிரி முழு காமெடியனாக இனிமேல் என்னை பார்க்க முடியாது. ஏனெனில் 4 படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறேன். அது எல்லாமே ஹீரோதான். மற்ற நடிகர்களுடன் இணைந்து நடிக்க முடிவு செய்திருக்கிறேன். ஆர்யாவுடன் ஒரு படம் நடிக்கவிருக்கிறேன். எப்படி என்னை கொண்டு செல்வது என யோசித்து வருகிறேன். யோசித்துதான் அதை செய்ய முடியும்’ என சொல்லியிருக்கிறார்.