கூலி ரஜினியின் நடிப்பைப் பார்த்து சத்யராஜ் ஆச்சரியம்... லோகேஷிடம் அப்படி சொல்லிருக்காரே!
லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் கூலி. இந்தப் படம் வரும் ஆகஸ்டு 14ல் திரைக்கு வருகிறது. படத்தில் லோகேஷ் உடன் ரஜினி இணைந்துள்ள முதல் படம் என்பதால் படத்திற்கான ஹைப் எகிறியுள்ளது. படத்தின் கிளிம்ப்ஸ், பர்ஸ்ட் லுக் என எல்லாமே அசத்தலாக உள்ளது. இந்தப் படத்தின் அப்டேட்களைத் தருகிறார் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு. வாங்க என்ன சொல்றாருன்னு பார்ப்போம்.
அனிருத், ரஜினி கூலி படத்தை முழுவதுமாகப் பார்த்து விட்டார்கள். இப்போ சத்யராஜ் படத்தைப் பார்த்து விட்டு லோகேஷிடம் ஆச்சரியமாக ஒரு விஷயத்தைச் சொன்னாராம். ஒரு கேமரா ஆன் ரோல்னு சொன்னாங்கன்னா ஒரு நடிகன் அந்தக் கேரக்டரா மாறுவான். அதை நான் பல நேரங்கள்ல பார்த்துருக்கேன். ஆனா ரஜினி சார் மட்டும்தான் அந்தக் கேரக்டராவே வாழ ஆரம்பிச்சிடறாரு.
மிஸ்டர் பாரத் படத்துல கிட்டத்தட்ட 36 ஆண்டுகளுக்கு முன்னால நான் பார்த்துருக்கேன். இப்பவும் அதே வைப் போட அதே மாதிரி பிரமாதமா நடிக்கிறாரு. எப்படித்தான் இந்த மனுஷன் நடிக்கிறாருன்னு தெரியல. யாராலயுமே இப்படி நடிக்க முடியாதுன்னு சத்யராஜ் லோகேஷிடம் சொன்னாராம். அதை லோகேஷ் ஷேர் பண்ணிருக்காரு.
லோகேஷ் ரஜினியைப் பார்த்து முதல்ல சொன்ன கதை வேற. ரஜினியும் அதை ரெடி பண்ணச் சொல்லிட்டாரு. அவரும் அதை ரெடி பண்ண ஆரம்பிக்கிறாரு. ஆனா எந்த இடத்திலயுமே அந்த ஸ்கிரிப்ட் சரியா வரலயாம்.
ரஜினிக்கு ஏற்றமாதிரியான கதை, இன்டர்வெல் பிளாக் முதல் கதையில லோகேஷ்சுக்கு சரியா அமையலயாம். அப்புறம் தயங்கி தயங்கி லோகேஷ் ரஜினியிடம் ஒரு விஷயத்தைச் சொல்லி இருக்கிறார். அதனால் இன்னொரு கதையைச் சொல்ல அதுவும் ரஜினிக்குப் பிரமாதமாக இருந்ததாம். அதை ரெடி பண்ணச் சொன்னாரு. அந்தக் கதைதான் கூலி.
ரஜினி லோகேஷைக் கூப்பிட்டு உட்கார வச்சி 'நீங்க எங்கேயுமே என்னை ஒரு ஃபார்மலா, ஒரு நடிகனா பார்க்காதீங்க. கூலி படத்துக்கு என்ன தேவையோ அதைச் சொல்லுங்க. நான் நடிச்சித் தாரேன். நீங்க வேணும்கறதை எங்கிட்ட இருந்து எடுத்துக்கோங்க'ன்னு சொன்னாராம். அது லோகேஷ{க்கு ரொம்பவே ஆச்சரியமாக இருந்ததாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.