Thuglife: வெளிநாடுகளில் தக் லைஃப் முன்பதிவு... இதிலும் கமல் தான் ஃபர்ஸ்ட்!
மணிரத்னம், கமல், சிம்பு, ஏ.ஆர்.ரகுமான் என வெற்றிக்கூட்டணியின் காம்போவில் உருவாகி உள்ள படம் தக் லைஃப். வரும் ஜூன் 5ல் படம் ரிலீஸ் ஆகிறது. இதையொட்டி படத்தின் புரொமோஷன் வேலைகள் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டு இருக்கிறது. படத்தின் ஆடியோ லாஞ்ச் நேற்று சென்னை சாய்ராம் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 9 பாடல்களை ஏ.ஆர்.ரகுமான் படத்திற்காகக் கொடுத்துள்ளார்.
அதிலும் ஜிங்குச்சா, சுகர் பேபி, விண்வெளி நாயகன் பாடல் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. கமலின் மகள் சுருதிஹாசன் விண்வெளி நாயகன் பாடலை அருமையாகப் பாடியுள்ளார். நேற்று விழா மேடையிலும் சிறப்பாகப் பாடி அப்ளாஸை அள்ளினார். இந்த நிலையில் படத்தின் வெளிநாடு முன்பதிவு குறித்த தகவல் வந்துள்ளது. இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா...
தக் லைஃப் படத்தின் முன்பதிவு வெளிநாடுகளில் தொடங்கி விட்டது என்பது உண்மைதான். பொதுவாக படம் வெளியாவதற்கு இரண்டு மூன்று நாள்களுக்கு முன்னதாகத் தான் வெளிநாடுகளில் முன்பதிவைத் தொடங்குவாங்க.
ஆனால் இதுவரைக்கும் இல்லாத சாதனையாக 2 வாரங்களுக்கு முன்னதாகவே தக் லைஃப் படத்தின் முன்பதிவு தொடங்கி இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் வெளிநாடுகளில் தக் லைஃபை வெளியிடுகின்ற ஏபி இன்டர்நேஷனல் நிறுவனம்.
அவங்க தான் திட்டமிட்டு 2 வாரங்களுக்கு முன்னதாகவே வெளிநாடுகளில் முன்பதிவைத் தொடங்கி இருக்காங்க. மிகச்சிறந்த வரவேற்பை வெளிநாடுகளில் தக் லைஃப் திரைப்படம் பெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தக் லைஃப் படத்தில் ஜிங்குச்சா பாடலை கமல் எழுதியுள்ளார். இந்தப் பாடலுக்கு கமலும், சிம்புவும் போட்ட ஆட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தில் சிம்பு, அபிராமி, திரிஷா, ஜோஜூ ஜார்ஜ், நாசர், அசோக் செல்வன் உள்பட பலரும் நடித்துள்ளனர். சிம்புவுக்கு கமலுக்கு இணையான ரோல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் ஹைப் ஏறிக்கொண்டே இருக்கிறது.